துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 85
நேற்றைய தொடர்ச்சி
“कारिहहिं बिधि” என்று சொல்வதன்
மூலம் சுக்ரீவன் தனக்கு இராமனுடன் நட்புக்
கொள்ளத் தகுதி இல்லை என்ற நினைக்கிறான். காரணம் நட்பு என்பது சம அந்தஸ்து
உள்ளவர்களிடம் உண்டாகிறது. சுக்ரீவன் நினைக்கிறான் நான் வானரம் இராமனோ மனிதன்.
நான் நாட்டை இழந்தவன். இராமனோ அரசகுமாரன். நான் பயந்தவன். இராமனோ வீரன். நான்
பயந்து இருக்கிறேன். இராமன் மகிழ்ச்சியாக எந்தவித பயமும் இல்லாமல் இந்தக் கொடிய
வனங்களில் சுற்றுகிறான், அத்தகைய இராமன் தன்னுடன் நட்பு கொண்டதில் தன்னைப்
பாக்யவானாகக் கருதுகிறான்.
तन् मम एव एष सत्कारो लाभः च एव उत्तमः प्रभो |
यत् त्वम् इच्छसि सौहार्दम् वानरेण मया सह || ४-५-१०
இதைத்தான் வால்மீகி இராமாயணத்திலும் மேற்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.
இதிலிருந்து தெரிகிறது இறைவன் எல்லா ஜீவராசிகளையும் தன் வயப்
படுத்திக் கொள்ள விரும்புகிறான் என்று. அப்படி விரும்பும்போது எல்லா
ஜீவராசிகளுக்கும் இறைவனிடம் சரண் அடையவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கீழ்க்கண்டவாறு
சொல்லப்பட்டுள்ளது
मित्रभावेन सम्प्राप्तं न त्यजेयं कथंचन।
दोषो यद्यपि तस्य स्यात् सतामेतदगर्हितम्॥३॥
“”எவன் ஒருவன் நட்புக் கரம் நீட்டி என்னிடம் வந்துவிடுகிரானோ நான்
அவனைக் கைவிடுவதில்லை. அவனிடம் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவர்களுக்கு நல்லவர்கள் அடைக்கலம் அளிப்பதில் எந்தவித தவறும் இல்லை.”
என்று இராமன் சொல்வதாக வால்மீகி கூறி உள்ளார்.
விபீஷணன்
சரணடைய வந்தபோது, சுக்ரீவன் உள்ளிட்ட வானரத் தலைவர்கள், "அவன் ஒரு
அரக்கன், ராவணனின்
தம்பி, ஒற்றனாகக்கூட
இருக்கலாம்; அவனை நம்ப வேண்டாம்" என்று எச்சரித்தனர்.
அப்போது இராமன் மிகத் தெளிவாக, "ஒருவன் 'நண்பன்' என்று கைகூப்பி வந்துவிட்டால், அவன் கடந்த
காலத்தில் எவ்வளவு பெரிய தவறு செய்தவனாக இருந்தாலும், அவனை
அரவணைப்பதே என் கடமை" என்று கூறி அபயம் அளிக்கிறார்.
தொடரும்
No comments:
Post a Comment