Saturday, April 25, 2026

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 88

 

நேற்றைய தொடர்ச்சி

 

வால்மீகி சொல்வதாவது – ஹனுமான் இரண்டு சுள்ளிகளை எடுத்து அவற்றை ஒன்றோடொன்று உராயவைத்து நெருப்பை உண்டாக்கினான். பிறகு அதற்கு பூக்களால் பூஜை செய்து அதை இராமன் சுக்ரீவன் இருவருக்கும் இடையில் வைத்தான். பிறகு இராமனும் சுக்ரீவனும் அக்னியை வலம் வந்து நண்பர்களானார்கள். சுக்ரீவன் இராமனிடம் சொன்னான் “இனி நாம் நண்பர்கள். இருவரது சுக துக்கங்களும் ஒன்றுதான்

 

அக்னிக்கு ஏன் இந்த மகத்துவம்?

 

ரிக் வேதத்தின் முதல் ஸ்லோகமே அக்னியை வணங்கும் சுலோகம் தான்

 

ॐ अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवमृत्विजम् । होतारं रत्नधातमम् ॥

 

ஓம்! எல்லா யாகங்களுக்கும் தலைமை தாங்கும், தேவர்களுக்கு ஆகுதி கொண்டு செல்லும்,அழியா செல்வத்தை அள்ளித் தரும் அக்னி தெய்வத்தை

வணங்கி வேண்டுகிறேன்!

 

அக்னி ஏன் இவ்வளவு முக்கியம்?

 

தேவ-மனித இடைத்தொடர்பு

 

மனிதன் நேரே தேவர்களிடம் பேச முடியாது அக்னி மூலமாகவே ஆகுதி சென்றடையும்.

 

அதனால் அக்னியை தேவதூதன்என்று அழைப்பார்கள்.

 

மூன்று அக்னிகள் (திரிகால யாகம்)

 

கார்ஹபத்ய அக்னி (வீட்டு அடுப்பு தினசரி யாகம்)

ஆஹவனீய அக்னி (வடகிழக்கு பெரிய யாகம்)

தட்சிண அக்னி (தெற்கு பித்ரு காரியம்)

 

காயத்ரி மந்திரத்திலும் அக்னி

 

தத் சவிதுர் வரேண்யம்தியோ யோ நஃ ப்ரசோதயாத்

இங்கு தியோ” = அக்னி (ஒளி உருவம்)

உதாரணம் ஒரு ஹோமத்தில்

நீங்கள் ஸ்வாஹாஎன்று நெய் விடுகிறீர்கள் அக்னி அதை எடுத்துக்கொண்டு

இந்திரனுக்கு, வருணனுக்கு, சூரியனுக்குஎன்று பிரித்துக் கொடுக்கிறார்.

இல்லையென்றால் தேவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது! அதனால்தான் ரிக் வேதம் தொடங்குவது

 

ॐ अग्निमीळे पुरोहितं

 

அக்னியை வணங்குகிறேன் ஏனெனில் அவர்தான் எல்லா யாகங்களுக்கும் தலைவர்!

 

ஒரு வரியில் சாரம்

 

அக்னி இல்லையெல் யாகமும் இல்லை, தேவர்களுக்குப் படையலும் இல்லை, மனிதனுக்குப் புண்ணியமும் இல்லை!

 

தொடரும்


No comments: