துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 73
நேற்றைய தொடர்ச்சி..
மகாவிஷ்ணு சொல்கிறார் “எவனொருவன் ஞான
மார்கத்தின் மூலமாக மட்டும் என்னை எப்போதும் பூஜிக்கிறானோ அவனே எனது பிரியமான
பக்தன்”
அயோத்தியா காண்டத்தில் ப்ரஹஸ்பதியும், இந்திரனும் உரையாடுகிறார்கள். அப்போது ப்ரஹஸ்பதி
இந்திரனிடம் இராமனைப் பற்றிச் சொல்லும்போது
जद्यपि सम नहिं राग न रोषू । गहहिं न पाप पूनु
गुन दोषू ॥
करम प्रधान बिस्व करि राखा । जो जस करइ सो तस
फलु चाखा
பகவான் சமமானவர் – அவருக்கு ஆசை இல்லை, கோபமும்
இல்லை.அவர் யாருடைய பாவம், புண்ணியம், குணம்,
குற்றம் ஆகியவற்றையும் ஏற்கவில்லை.அவர் இந்த உலகத்தை “கர்மம்"
(செயல்) அடிப்படையில் அமைத்துள்ளார். யார் எப்படிச் செய்கிறார்களோ, அவர்கள் அதற்கேற்பவே பலனை அனுபவிக்கிறார்கள்.
மீண்டும் துளசிதாசர்.............
இராமன் हनुमंत என்று அழைக்கிறார். இதிலிருந்து ஹனுமன் தனது பெயரைச் சொல்லி
இருக்கிறான் என்று தெரிகிறது. வால்மீகி இராமாயணத்தில் தனது பெயர் ஹனுமன் என்றும்
தான் சுக்ரீவனால் அனுப்பப்பட்டவன் என்று சொல்கிறார். ஆனால் ராமசரித மானஸில் அவ்வாறு
சொல்லப்படவில்லை.
துளசிதாசர் में सेवक सचराचर रूप“ பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உலகத்திலுள்ள எல்லா
பொருட்களையும் ( அசையும் மற்றும் அசையாத) எனது ஸ்வரூபமாகவே பார்க்கவேண்டும் எனச்
சொல்கிறார். இதன் பொருள் “எனது ஸ்வரூபத்தை
அத்வைத தத்துவமாகப் பார்க்காமல் த்வைத உணர்வுடன் அணுகவேண்டும் என சொல்கிறார்.
தொடரும்
No comments:
Post a Comment