துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 86
நேற்றைய தொடர்ச்சி
சர்கம் 3
तब हनुमंत उभय दिसि की सब कथा सुनाइ।
पावक साखी देइ करि जोरी प्रीति दृढ़ाइ॥4॥
அப்பொழுது ஹனுமன் இரு
பக்கத்துக் கதைகளையும் இரு
தரப்பினருக்கும் எடுத்துக் கூறி அக்னியை
சாட்சியாக வைத்து இருவருக்குமிடையே உள்ள நட்பை உறுதி செய்தார்.
துளசி தாசர் तब என்ற பதப் பிரயோகம் போடுகிறார். அதாவது எப்போது பரஸ்பரம் நட்பு
கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்ததோ என்ற பொருள். அதாவது எப்போது இரு தரப்பு
கதைகளையும் கேட்டு இருவருக்கிடையேயும் நட்பு மலர்கிறதோ என்ற பொருள். காரணம்
பின்னல் இருவருக்கிடையே எந்தவித பிணக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக., அப்படி என்ன
இருபக்க கதைகள்?. இராமன் சார்பாக ஹனுமன் சொன்னது வான்மீகத்தில்
अयम् रामो महाप्राज्ञ संप्राप्तो दृढ विक्रमः |
लक्ष्मणेन सह भ्रात्रा रामोऽयम् सत्य विक्रमः || ४-५-२
इक्ष्वाकूणाम् कुले जातो रामो दशरथात्मजः |
धर्मे निगदितः च एव पितुर् निर्देश कारकः || ४-५-३
राजसूय अश्वमेधैः च वह्निः येन अभितर्पितः |
दक्षिणाः च तथा उत्सृष्टा गावः शत सहस्रशः || ४-५-४
तपसा सत्य वाक्येन वसुधा येन पालिता |
स्त्री हेतोः तस्य पुत्रोऽयम् रामः अरणयम्
समागतः || ४-५-५
तस्य अस्य वसतो अरण्ये नियतस्य महात्मनः |
रावणेन हृता भार्या स त्वाम् शरणम् आगतः || ४-५-६
भवता सख्य कामौ तौ भ्रातरौ राम लक्ष्मणौ |
प्रगृह्य च अर्चयस्व एतौ पूजनीयतमौ उभौ || ४-५-७
“இவர் இக்ஷ்வாகு குல அரசன் தசரதனின்
புதல்வன். தந்தையின் கட்டளையை ஏற்று மனைவியுடனும் தனது தம்பியான இலக்ஷ்மணனுடனும் வனத்திற்கு
வந்துள்ளார். இராவணன் இவரது மனைவியை கவர்ந்து சென்றுவிட்டான். தனது மனைவியைத் தேடி
இங்கு வந்துள்ளார். இவர் சத்யசாந்தன். நேர்மையின் அவதாரம். தாங்கள் சீதையை தேடித்
தர இவருக்கு உதவ வேண்டும்” என்று
சொன்னான்.
தொடரும்
No comments:
Post a Comment