துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 90
நேற்றைய தொடர்ச்சி
இராமயணத்தில் அக்னிக்கு முக்கிய இடம்
உள்ளது. தசரதன் செய்த வேள்வித் தீயிலிருந்து வெளிவந்த பாயசத்தினால் வந்தவர்கள்
தான் இராமனும் அவனது தம்பியரும். துளசி இராமாயணத்தில் இராமன் சீதையை அக்னியிடம்
ஒப்படைத்து விட்டு அதிலிருந்து வெளிவரும் மாயா சீதையைத்தான் இராமன் கடத்திச்
சென்றான். ஹனுமான் இலங்கையைத் தீக்கிரையாகியது அக்னியின் உதவியால். கடைசியில் சீதை
அக்னிப் பிரவேசம் செய்து மாயா சீதை அக்னிக்குள் பிரவேசித்து உண்மையான சீதை
அக்னியிலிருந்து வெளிவருகிறாள். ஆகையால் இராமாயணத்தின் தொடக்கம், இடை மற்றும்
முடிவில் அக்னியின் பங்கு உள்ளது.
அக்னி சிவஸ்வரூபம். ஆக இங்கு சிவனையும் சாட்சியாகக் கருதலாம்.
कीन्हि प्रीति कछु बीच न राखा। लछिमन राम चरित् सब भाषा॥
இராமன் சுக்ரீவன் நட்பு
இலக்ஷ்மணன் இராமன் காட்டிற்கு வந்த செய்தியையும் சீதை கவர்ந்து செல்லப்பட்ட விவரத்தையும்
சுக்ரீவனிடம் எடுத்துக் கூறினான். ஹனுமன்/
ஏற்கனவே ஹனுமன் இருதரப்புக் கதைகளையும் சொல்லிவிட்டா.ன். பிறகு
இலக்ஷ்மணன் இராம சரிதத்தை மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம்.
ஹனுமன் இருவருக்கும் இடையே நட்பை உருவாக்கி மொத்தக் கதையையும் சுருக்கமாகச்
சொன்னான். அதவாது தெரிந்தவரை சொன்னான்.. ஹனுமனுக்கு முழு விவரமும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. அதனால் சுருக்கமாகச் சொல்லிவிட்டான். இலக்ஷ்மணன் அதை முழுமையாகச்
சொன்னான். இராமனின் பிறப்பு, கல்வி முறை, சீதையுடன் திருமணம், தந்தையின்
கட்டளைக்கிணங்க வனவாசம், இராவணனால் சீதை அபகரிக்கப்பட்ட விவரங்கள் ஆகியவை. இதை
இராமன் ஏன் சொல்லவில்லை? தனது வீரத்தையும், பிரதாபத்தையும் தனது வாயால் சொல்வதைவிட
இலக்ஷ்மணன் சொல்வதே சிறப்பு என்று இராமன் முடிவு செய்திருக்கலாம். நட்பு
உடன்படிக்கை எற்பட்ட பிறகே இலக்ஷ்மணன் இந்த விவரங்களைச் சொல்கிறான். காரணம் இரண்டு
நண்பர்களிடையே எந்தவித ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்பதற்காக.
தொடரும்
No comments:
Post a Comment