Monday, April 13, 2026

 




 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 76

 

சுக்ரீவ அறிமுகம்


தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 


 

உடனே ஹனுமன் தான் வந்த காரியத்தை ஸ்ரீ இராமனுக்குத் தெரியப் படுத்தினார்.

 

नाथ सैल पर कपिपति रहई। सो सुग्रीव दास तव अहई॥1

तेहि सन नाथ मयत्री कीजे। दीन जानि तेहि अभय करीजे॥

सो सीता कर खोज कराइहि। जहँ तहँ मरकट कोटि पठाइहि॥2

  

“ஐயனே! இந்த மலையில் வானர அரசனான சுக்ரீவன் இருந்து வருகிறான். அவன் உங்கள அடியார்களுள் ஒருவன். அவனுடன் நட்புக் கொண்டு  அவருக்கு அபயம் அளித்து அவரது  பயத்தைப் போக்குவீராக. அவர் ஆங்காங்கே கோடிக்கணக்கான வானரங்களை அனுப்பி அன்னை சீதையைக் கண்டுபிடிக்க உதவுவார்.

 

இந்த உலகில் நண்பன் இல்லாதவன் ஆபத்துக்களை கடக்க முடியாது

 

एहिं तन राम भगति मैं पाई, ताते मोहि ममता अधिकाई ॥

जेहि तें कछु निज स्वारथ होई, तेहि पर ममता कर सब कोई ॥

 

இந்த உடலில் நான் ராம பக்தியைப் பெற்றேன்.

அதனால் எனக்கு இந்த உடலின் மீது அதிகமான பாசம் ஏற்பட்டது.

யாருக்கு எதிலிருந்து சுயநலன் கிடைக்கிறதோ,

அவர்களுக்கு அதில் பாசம் ஏற்படுவது இயல்பே.”

 

 

உடலினுள் ராமன் உறைந்ததால்,

உயிரினும் மேலான பாசம் வந்தால்,

பயனளிக்கும் பொருளில் பாசம் கொள்வார்,

பக்தியால் பாசம் பிறந்ததாலே.

 

 

ஹனுமனுக்கு மனதில் ஒரு சந்தேகம் பிறந்திருக்கும் நாம் சுக்ரீவனைப் பற்றிச் சொல்லுகிறோமே. அந்த சுக்ரீவன் வாலிக்குப் பயந்து மலையில் நாட்டை இழந்து வாழ்கிறான். இவனுடன் நட்புக் கொள்ளுங்கள் . கோடிக்கணக்கான வானர வீரர்களைக் கொண்டு சீதையைத் தேட உதவுவான்  என்று சொல்கிறோமே. சுக்ரீவன் இப்போது இருக்கும் நிலையில் எவ்வாறு உதவுவான் என்று சந்தேகம் இராமனுக்கு வந்தால் என்ன சொல்வது? என்று யோசனை செய்தவாறே கவனமாக வார்த்தைகளைக் கையாள்கிறான். துளசிதாசர் தீன் என்று வார்த்தைப் பிரயோகம் செய்கிறார். அதாவது பாதிக்கப்பட்ட என்று சொல்கிறார். அதையும் சொல்லிவிட்டு கோடிக்கணக்கான வானர வீரர்களை விட்டுச் சீதையைத் தேட  உதவுவான் என்றும் சொல்வதன் நோக்கம் சுக்ரீவன் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் மிக நல்லவன். அரசனாக இருந்தவன் என்று சுக்ரீவனைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் இராமனுக்கு வரவேண்டும் என்று பாடுபடுகிறான். 

 

पाट कीट तें होइ तेहि तें पाटंबर रुचिर।

कृमि पालइ सबु कोइ परम अपावन प्रान सम॥

  

பட்டு (பட்டாடை) ஒரு பூச்சியிலிருந்து உருவாகிறது, அந்த பூச்சியிலிருந்து வந்த பட்டு ஆடை அழகாகத் தோன்றுகிறது. அந்த பூச்சி அசுத்தமானது. ஆனாலும்  அந்த பூச்சியை எல்லோரும் வளர்க்கிறார்கள். அதுபோல சுக்ரீவன் இன்று பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் பின்னால் பயனுள்ளவனாக இருப்பான் என்று அவனது பேச்சு பொருள்படுகிறது.

 

தொடரும்

 


No comments: