துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 91
நேற்றைய தொடர்ச்சி
நட்பு உடன்படிக்கை ஏற்பட்டப்பிறகு இலக்ஷ்மணன் சுக்ரீவனுக்கு இராமனைப்
பற்றிய முழு விவரங்களையும் சொல்கிறான். காரணம் இரண்டு நண்பர்களிடையே எந்தவித ஒளிவு
மறைவு இருக்கக்கூடாது என்பதற்காக.
ददाति प्रतिगृह्णाति गुह्यमाख्याति पृच्छति!
भुङ्क्ते भोजयते चैव षड्विधं प्रीतिलक्षणम्!!
நட்பின் இலக்கணம் என்ன? பர்த்ருஹரி சதகம் என்ற நூலில்
சொல்லப்படுவதாவது. தேவைப்படும்போது கொடுப்பது, தேவைப்படும்போது எடுத்துக் கொள்வது,
ரகசியங்களைச் சொல்வது, ரகசியங்களைக் கேட்பது, நமக்கு பிடித்த உணவைச் சாப்பிடுவது,
அவர்களுக்குப் பிடித்த உணவைக் கொடுப்பது
ஆகியவைதான் நட்பின் இலக்கணங்களாகக் கருதப்படுகின்றன.
தருவான் பெறுவான் தனி ரகசியம் சொல்வான்
அருவான் கேட்பான் அன்பினால் —
உருவான் உண்பான் உணவளிப்பான் என்பான்
நட்பின் இலக்கணம் நன்று.
அடுத்து ஹனுமான் சொன்னது கதா “कथा” இலக்ஷ்மணன் சொன்னது “चारित. இங்கு
கதா என்பது பெண்பால். ஹனுமன் சீதை அபகரிப்பு மற்றும் சுக்ரீவன் மனைவி உருமை
வாலியால் அபகரிப்பு விஷயங்களைச் சொன்னான். இலக்ஷ்மணன் சொன்னது சரிதம். சரித என்பது
ஆண்பால். இலக்ஷ்மணன் இரானின் வீர வரலாறான தாடகை வதம், சுபாகு வதம், மாரீசன் வதம், கர தூஷண வதம், விராதன் மற்றும்
கபந்தன் வதம் ஆகிய வீர வரலாற்றைச் சொன்னான் என்று உரையாசிரியர்கள் சொல்லியுள்ளனர்.
இந்த விவரங்கள் ஹனுமனுக்குத் தெரியவில்லை.
कह सुग्रीव नयन भरि बारी। मिलिहि नाथ मिथिलेसकुमारी॥1॥
இலக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட சுக்ரீவனின் கண்களில் கண்ணீர் பெருகியது.
“ஜானகி கிடைத்துவிடுவாள். கவலை வேண்டாம்” என ஆறுதல் கூறினான். சுக்ரீவனின் நட்பு
உண்மையான நட்பு. அதனால் இராமனின் துயரத்தைக் கேட்டதும் தான் கண்ணீர் விட்டு
அழுதான்.
தொடரும்
No comments:
Post a Comment