துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 68
நேற்றைய தொடர்ச்சி..
இங்கு துளசி தாசர் तैं मम्र प्रिय लछिमन तें दूना” என்று சொல்கிறார். அதாவது
இலக்ஷ்மணன் எனக்கு மட்டும் பணிவிடை செய்கிறான். நீ எனக்கும் இலக்ஷ்மணனுக்கும்
பணிவிடை செய்யப்போகிறாய். அதனால் தூனா என்ற வார்த்தையைப் போடுகிறார். ஹனுமான் தனது இயல்பான வானர உருவத்தைவிட்டு அந்தண
வேடமிட்டு வந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். இராமன் दूना என்று சொல்லி அவருடைய வருத்தத்தைப் போக்கிவிட்டான். ஒரு சில உரையாசிரியர்கள் இங்கு இராமன் இலக்ஷ்மணனும்
நீயும் இருவரல்ல ஒருவரே என்று சொல்வதாகச் சொல்கின்றனர்.
இலக்ஷ்மணன் இராமனின் பாதுகாப்பாளன். कछुक दूरि सजि बान सरासन। जागन लगे बैठि बीरासन॥ வனத்தினுள் வந்த
நாளிலிருந்தே தனது வேலையைத் திறம்படச் செய்பவன். இனி ஹனுமன் இலக்ஷ்மணனின்
பாதுகாவலன்.. ஹனுமனின் பன்னிரண்டு பெயர்களுள் लक्ष्मणप्राणदाता च दशग्रीवस्य दर्पहा।' (सुदर्शनसंहिता) இதுவும் ஒன்று. மீதி பெயர்கள் என்னென்ன
हनुमानजानसुनुर्वायुपुत्रो महाबल :
रामेष्ठ: फाल्गुनसख: पिंगाक्षोमितविक्रम : ॥1॥
उदधिक्रमणश्चैव सीताशोकविनाशन :।
लक्ष्मणप्राणदतश दशग्रीवस्य दर्पहा
============================================
समदरसी मोहि कह सब कोऊ । सेवक प्रिय अनन्य गति
सोऊ॥ ८॥
दो०--सो अनन्य जाके असि मति न टरइ हनुमंत।
में सेवक सचराचर रूप स्वामि भगवंत॥ ३॥
இராமன் மேலும் சொல்கிறான் “எல்லோரும் என்னைப் பார பக்ஷம் பார்க்காதவன்
என்று சொல்கின்றனர். ஆனால் மற்றவர்களுக்குக் காட்டாத பரிவு அடியார்களுக்குக்
காட்டுகிறவன் நான்.இவ்விஷயத்தில் நான் பாரபட்சம் பார்ப்பவன். ஏனென்றால் அடியார்கள்
என்னையே சரணடைந்தவர்கள். மற்றவர்கள் உதவியை நாடாதவர்கள்.. ஆஞ்சநேயா! எவன் அண்ட
சராசரங்களை ஆண்டவனாகவும், தன்னை அவைகளின்
சேவனாகவும் கருதி நெறி பிறழாமல் தொண்டாற்றி வருகின்றானோ அவனே என் சேவகன் என்பதைத் தெரிந்து கொள்”.
“நீயும் “நான் இராம சேவகன்.
அசையா அசையும் பொருட்கள் நிறைந்த இந்த உலகம் முழுவதும் பகவத் ஸ்வரூபத்துடன்
எனது உருவமாக விளங்குகிறது என்று நினைக்கிறாய். என்னை அடைந்த பக்தர்களிடமும் சராசர மயமான இந்த உலகத்தில் நீ எல்லோருடனும் கருணையுடன்
இருக்கிறாய். ஆகையால் ஆஞ்சநேயா! நீ வானரனாக
இருந்தபோதிலும் என் ஸ்வரூபம்தான். அதனால்
நான் உன்னை நிராகரித்துவிட முடியாது” என்று கூறினார் பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆஞ்சநேயர் பெரு மகிழ்ச்சி உற்றார். துக்கம் அவரை விட்டு
விலகியது.
தொடரும்
No comments:
Post a Comment