துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 79
நேற்றைய தொடர்ச்சி
இராமனைச் சந்திக்காமலேயே சுக்ரீவன் இராம
பக்தனாக இருப்பதில் வியப்பில்லை. பல அடியார்கள் இறைவனைச் சந்திக்காமலேயே அவரது
பக்தனாக இருந்து அவருக்குச் சேவை செய்வதில்லையா?
இதற்கு நிறைய உதாராணங்கள் உண்டு
பூசலார்
நாயனார் (மனக்கோயில் கட்டியவர்)
பெரியபுராணத்தில்
வரும் பூசலார், இறைவனை நேரில் சந்திக்காமலேயே பக்தி
செய்தவர்களில் மிக முக்கியமானவர்.
செயல்: ஒரு கற்கோயில் கட்ட இவரிடம் வசதி இல்லை. எனவே, தனது
மனதிற்குள்ளேயே ஒவ்வொரு கல்லாக அடுக்கி, பல ஆண்டுகள் செலவு செய்து ஒரு பிரம்மாண்டமான
கோயிலைக் கட்டி முடித்தார் (மனக்கோயில்).
விளைவு: அதே சமயம் காஞ்சியில் பல்லவ மன்னன் ஒரு
கற்கோயிலைக் கட்டி முடித்து, குடமுழுக்குச் செய்யத் திட்டமிட்டான். ஆனால்
இறைவன் மன்னனின் கனவில் தோன்றி, "நான் பூசலாரின் மனக்கோயிலுக்குச் செல்ல வேண்டும், நீ தேதியை
மாற்று" என்று கூறினார்.
தத்துவம்: இது
ஜே. கிருஷ்ணமூர்த்தி (J.K) கூறும் "The Mind is the temple" என்ற கருத்திற்கு மிக நெருக்கமானது. உருவமாகப்
பார்ப்பதை விட, ஒருவன் தனது விழிப்புணர்வால் (Awareness) இறைநிலையைத்
தன்னுள் நிலைநிறுத்துவதே உயர்ந்தது.
ஹனுமன் மேலும் கூறுகிறான்
तेहि सन नाथ मयत्री कीजे। दीन जानि तेहि अभय करीजे॥
सो सीता कर खोज कराइहि। जहँ तहँ मरकट कोटि पठाइहि॥2
एहि बिधि सकल कथा समुझाई। लिए दुऔ जन पीठि
चढ़ाई॥
தாங்கள் சுக்ரீவனுடன் நட்புக்
கொண்டு அவருக்கு அபயம் அளித்து அவரது பயத்தைப் போக்குவீராக. அவர் ஆங்காங்கே
கோடிக்கணக்கான வானரங்களை அனுப்பி அன்னை சீதையைக் கண்டுபிடிக்க உதவுவார். இவ்வாறு
கூறிவிட்டு இராமன் இலக்ஷ்மணன் இருவரையும் முதுகில்
சுமந்து சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றான்.
தொடரும்
No comments:
Post a Comment