Friday, April 17, 2026

 


காலை வணக்கம்

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 80

 

நேற்றைய தொடர்ச்சி

 

 இங்கு ஹனுமன் ஒரு உத்தம தூதனைப் போல் நடந்து கொள்கிறான். சுக்ரீவன் வானர அரசன்.  சாஸ்திரங்கள் அறிந்தவன். நீதி மான். மனைவியைப் பிரிந்து வாழ்பவன் என்று இராமனிடம் சுக்ரீவனின் குண நலன்களை எடுத்துச் சொல்கிறான். இராமனையும் இலக்ஷ்மணனையும் பார்த்த சுக்ரீவன் ஓடுவதற்குத் தயாராக இருந்தான். அத்தகைய சுக்ரீவனுடன் இராமனுக்கு நட்பு ஏற்படுத்த முயற்சி செய்கிறான். தாங்கள் அவனுக்கு அபயம் அளித்தால் அவன் தங்களுக்கு நிச்சயம் கைம்மாறு செய்வான்என்று சொல்கிறான்...

 

“அன்னை சீதையை அபஹரித்துச் சென்ற அரக்கனை இந்த அடர்ந்த காட்டில் நீங்கள் இருவர் மட்டும் தேடுவது என்பது மிகச் சிரமமான காரியம். சுக்ரீவன் கோடிக்கணக்கான வானரர்களை எல்லா இடங்களுக்கும் அனுப்பி இந்த வேலையை எளிதாக்குவான். வானரங்களுக்கு எங்கும் செல்லத் தடையில்லை. ஆதலால் இந்த உலகில் எந்த மூலையில் அன்னை சீதை இருந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆதலால் தாங்கள் தயவு கூர்ந்து சுக்ரீவனுக்கு நட்புக்கரம் நீட்டுங்கள். தாங்களும் அரசன் சுக்ரீவனும் அரசன் . ஆகையால் தாங்கள் சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுதல் தகும் प्रीति बिरोध समान सन कारिय नीति असि आहि। என்ற பொருளில் சொன்னான் ஹனுமன். மேலும் तेहि अभय करीजै॥   அதாவது சுக்ரீவனது எதிரியைக் கொன்று தாங்கள் அபயக் கரம் நீட்ட வேண்டும்” என்று சொல்கிறான் ஹனுமன் .

 

 

அடுத்து ஹனுமன் சீதையைக் கண்டுபிடிக்க சுக்ரீவன் உதவுவான் என்று கூறுகிறான். இங்கு ஒரு கேள்வி எழலாம். ஹனுமனுக்கு சீதை என்ற பெயர் எப்படித் தெரிந்தது?  இராமன் ஹனுமனிடம் इहाँ हरी निसिचर बैदेही  வைதேஹியை இராக்ஷசன் அபஹரித்துவிட்டான் என்றுதான் சொல்கிறான். வைதேஹிதான் சீதை என்று ஹனுமனுக்கு எப்படித் தெரிந்தது? பத்ம இராமாயணத்தில்  இராமனும் ஹனுமனும் குழந்தைப் பருவத்தில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்று சொல்லப்பட்டுள்ளது அப்போது இராமனுக்குத் திருமணம் ஆகவில்லை. ஆக அப்போதும் ஹனுமனுக்கு சீதை என்ற பெயர் தெரிய வாய்ப்பில்லை.

 

பிறகு எப்படி தெரிந்திருக்ககூடும்?

 

தொடரும்


No comments: