துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 87
நேற்றைய தொடர்ச்சி
இராம இலக்ஷ்மனர்களை சுக்ரீவன்
சந்தித்ததும், இராமனின் சார்பாக இலக்ஷ்மணன் சொன்ன வரலாற்று விஷயங்களை சுக்ரீவனிடம்
ஹனுமான் கூறினான். பிறகு சுக்ரீவன்
தரப்பிலிருந்து இந்த விவரங்களைச் சொன்னான் ஹனுமன் “சுக்ரீவனை அவனது அண்ணன் வாலி
நாட்டைவிட்டு துரத்தி விட்டான். அவனது ராஜ்ஜியம் அவனது மனைவி எல்லாவற்றையும்
பிடுங்கிக் கொண்டதோடல்லாமல் அவரிடம் இன்னும் பகைமை கொண்டுள்ளான். வாலியைக் கண்டு
பயந்து சுக்ரீவன் இங்கு தங்கியுள்ளான். சீதையைத் தேடித் தருவதில் இவன் உதவியாக
இருப்பான். தாங்கள் அவனுக்கு வாலியிடமிருந்து அவனது மனைவியை மீட்டுத் தருவதுடன்
அரசையும் பெற்றுத் தரவேண்டும்” என்று கூறுகிறான்.
சுக்ரீவன் இராமன் உடன்படிக்கை
பிறகு அக்னியை சாக்ஷியாக வைத்து
ஒருவொருக்கொருவர் உதவி செய்வதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
काष्ठयोः स्वेन रूपेण जनयामास पावकम् |
दीप्यमानम् ततो वह्निम् पुष्पैः अभ्यर्च्य सत्कृतम् || ४-५-१४
तयोर् मध्ये तु सुप्रीतो निदधौ सुसमाहितः |
तो अग्निम् दीप्यमानम् तौ चक्रतुः च प्रदक्षिणम्
|| ४-५-१५
सुग्रीवो राघवः च एव वयस्यत्वम् उपागतौ |
ततः सुप्रीत मनसौ तौ उभौ हरि राघवौ || ४-५-१६
अन्योन्यम् अभिवीक्षन्तौ न तृप्तिम् अभिजग्मतुः |
त्वम् वयस्योऽसि हृद्यः मे हि एकम् दुःखम् सुखम्
च नौ |
வால்மீகி சொல்வதாவது – ஹனுமான் இரண்டு
சுள்ளிகளை எடுத்து அவற்றை ஒன்றோடொன்று உராயவைத்து நெருப்பை உண்டாக்கினான். பிறகு
அதற்கு பூக்களால் பூஜை செய்து அதை இராமன் சுக்ரீவன் இருவருக்கும் இடையில்
வைத்தான். பிறகு இராமனும் சுக்ரீவனும் அக்னியை வலம் வந்து நண்பர்களானார்கள்.
சுக்ரீவன் இராமனிடம் சொன்னான் “இனி நாம் நண்பர்கள். இருவரது சுக துக்கங்களும்
ஒன்றுதான்.. இதே கருத்தைத்தான் ஆத்யாத்ம இராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளது
ततो हनूमान् प्रज्वाल्य तयोरग्निं समीपतः ।
तावुभौ रामसुग्रीवावग्नौ साक्षिणि तिष्ठति ॥ ४४॥
बाहू प्रसार्य चालिङ्ग्य परस्परमकल्मषौ
இங்கு ஒரு கேள்வி எழலாம் . அக்னிக்கு
இணையான சக்தி உள்ளவன் சூர்யன் . பிறகு அவனை ஏன் சாக்ஷியாக வைத்துக் கொள்ளவில்லை?
இதற்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது. – இராமன் சூரிய வமசத்தைச் சேர்ந்தவன்.
சுக்ரீவன் சூரியனின் ஒரு அம்சம். தங்களைச் சார்ந்தவர்களைச் சாக்ஷியாக வைத்துக்
கொள்ளக் கூடாது என்ற நோக்கத்திலேயே சூரியனை அவர்கள் சாட்சியாகக் கருதவில்லை.
தொடரும்
No comments:
Post a Comment