Saturday, April 11, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 74

  

நேற்றைய தொடர்ச்சி..

 

துளசிதாசர் में सेवक सचराचर रूप பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உலகத்திலுள்ள எல்லா பொருட்களையும் ( அசையும் மற்றும் அசையாத) எனது ஸ்வரூபமாகவே பார்க்கவேண்டும் எனச் சொல்கிறார்.  இதன் பொருள் “எனது ஸ்வரூபத்தை அத்வைத தத்துவமாகப் பார்க்காமல் த்வைத உணர்வுடன் அணுகவேண்டும் என சொல்கிறார்.

  

அது என்ன த்வைத உணர்வு. யார் யார் எந்த எந்த கடவுகளை வழிபடுகின்றனரோ இந்த உலகின் அசையும் மற்றும் அசையா பொருட்களில் அந்தக் கடவுளின் வடிவத்தைக் காண வேண்டும்” என்று சொல்கிறார்.

  

அதாவது உலகில் நாம் காண்பது எல்லாமே இறைவனின் உடல்.

 

खं वायुमग्निं सलिलं महीं च

                             ज्योतींषि सत्त्वानि दिशो द्रुमादीन् ।

          सरित्समुद्रांश्च हरेः शरीरं ।

                          यत्   किञ्च   भूतं   प्रणमेदनन्यः ॥

                                 (श्रीमद्भागवत ११/२/४१)

 

 

ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், விலங்குகள், திசைகள், மரங்கள், ஆறுகள், கடல் - இவை அனைத்தும் கடவுளின் உடல் –இவ்வாறு நினைத்துத்தான் பக்தன் பக்தியுடன் எல்லாவற்றையும் வணங்க வேண்டும். அத்வைதமோ, த்வைதமோ, விஷிஷ்டாத்வைதாமோ, எல்லாவற்றிலும் இறைவன் ஒருவனே. பரமாத்மா இரண்டு கைகள் உடையவனோ, நான்கு கைகள் உடையவனோ, ஆயிரம் கைகள் உடையவனோ, மனித அவதாரம் எடுத்தவனோ, கங்கை யமுனை போன்ற நீர் நிலைகளோ, எந்தவிதமாக இருந்தாலும் இறைவன் ஒருவனே. எல்லாமே பரமாத்மாவின் அங்கங்கள் தான். எதாவது ஒரு அங்கத்தைப் பிடித்துக் கொண்டால் அனைத்து இறைவனையும் அடைந்து விடலாம்.

 

भूमौ जले नभसि देवनरासुरेषु भूतेषु देवि सकलेषु चराचरेषु।

पश्यन्ति शुद्ध मनसा खलु रामरूपम् रामस्य ते भुवितले समुपासकाश्च।।

  

யோகவஷிஷ்ட மகாராமாயணத்தில் சொல்வதாவது

 

“ஹே தேவி, பூமி, நீர், ஆகாயம், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள், அசையும் மற்றும் அசையா உயிரங்கள் ஆகியவற்றில் தூய்மையான எண்ணத்துடன் பகவான் ஸ்ரீ இராமரின் வடிவத்தைக் காண்பவர்கள் பூமியிலே ஸ்ரீ இராமரை வணங்குவதில் சிறந்தவர்கள்..

 

 

अब गृह जाहु सखा सब भजेहु मोहि दृढ़ नेम।

सदा सर्बगत सर्बहित जानि करेहु अति प्रेम॥16

 

 

பட்டாபிஷேகம் முடிந்து வானரத் தோழர்களுக்கு விடை கொடுக்கும்போது இராமன் சொல்கிறான்  “தங்கள் எல்லோரது பணி அளப்பரியது.. தாங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று என் மீது பக்தி செலுத்துக”

  

जड़ चेतन जग जीव जत सकल राममय जानि।

बन्दउँ सब के पद कमल सदा जोरि जुग पानि।

 

இராமசரித மானஸ் எழுத ஆரம்பிக்கும் போதே துளசிதாசர் ‘இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா பொருட்கள் எல்லாவற்றையும் இராமனாவே கருதி வணங்குகிறேன்” என்று சொல்கிறார்.

 

தொடரும்

 


No comments: