வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சீதையைத் தேடுதல்
பதிவு எண் 329
நேற்றைய
தொடர்ச்சி......................
தங்கள் பார்வையை இழந்த
அந்த க்ஷத்திரியர்கள் அணுக இயலாத மலைகளில் சுற்றித் திரிந்தனர். தங்கள் பார்வையை இழந்து
துன்பப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் துயரடைந்து, தங்கள் பார்வையை மீண்டும் பெறத் தீர்மானித்து, அந்தக் குற்றமற்ற
பெண்மணியிடம் தஞ்சமடைந்தனர். தங்கள் பார்வை போன போது, தங்களை விட்டு ஒரு நெருப்பு வெளியேறியதை உணர்ந்த அந்த க்ஷத்திரியர்கள், துயர் நிரம்பிய இதயங்களுடன்
அந்தச் சிறப்பு மிகுந்த பெண்ணிடம். "ஓ பெண்ணே, கருணை கொள்வாயாக. நாங்கள்
எங்கள் பார்வையை மீண்டும் அடைய விரும்புகிறோம். நாங்கள் இனி அப்படிப்பட்ட தீய
செயலைச் செய்யாது, எங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறோம்.. ஓ அழகானவளே, நீயும் உனது குழந்தையும்
எங்களிடம் கருணை காட்டுவீராக. எங்களுக்குப் பார்வையைக் கொடுத்து, மன்னர்களான எங்களுக்கு
நன்மையைச் செய்வீராக" என்றனர்".(
இப்படி அவர்களால் கேட்டுக்
கொள்ளப்பட்ட அந்த பிராமணப் பெண்,
"குழந்தைகளே, நான் உங்கள் பார்வையைப்
பறிக்கவில்லை. உங்களிடம் கோபம் கொள்ளவும் இல்லை. இருப்பினும், பிருகு வம்சத்தைச் சேர்ந்த
இந்தக் குழந்தை உங்களிடம் கோபமாக இருக்கிறான். தன் குலம் உங்களால் அழிந்ததை அறிந்த இந்தக்
குழந்தையின் கோபத்தினால்தான் உங்கள் பார்வை பறிபோனது என்பதில் சிறு ஐயமும்
கிடையாது. குழந்தைகளே, நீங்கள் பிருகு குலத்தின்
கருக்களைக்கூட அழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தக் குழந்தை எனது
தொடைக்குள் நூறு வருடங்கள் இருந்தான். பிருகு குலத்திற்கு வளமை
உண்டாக, ஆறு அங்கங்களுடன் கூடிய
வேதமானது, எனது கருவில் இருந்த
இவனுக்கு அருளப்பட்டது. பிருகு குலத்தின் இந்தக் கொழுந்து, தனது மூதாதையர்களின்
மரணத்திற்குப் பழிவாங்கவே உங்களைக் கொல்ல விரும்புகிறது! இவனது தெய்வீகச்
சக்தியால் தான் உங்கள் கண்கள் பறிக்கப்பட்டன. எனவே, ஓ குழந்தைகளே, எனது தொடையிலிருந்து
பிறந்த இந்த அற்புதமான குழந்தையிடம் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள்
அஞ்சலியின் மூலம் நிறைவடைந்த இவன் உங்களுக்குப் பார்வையை அருளக்கூடும்"
என்றாள்"
தொடரும்
No comments:
Post a Comment