வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 353
அப்பொழுது இராமன்
சுக்ரீவனைப் பார்த்து “சுக்ரீவ! உன் செயல் எனக்குப் பெரும் ஆச்சர்யத்தைத்
தருகிறது. நான்கு திக்குகளிலும் வானரர்களை அனுப்பினாய். அவ்வாறு அனுப்பும் பொழுது
, ஒவ்வொரு திசையில் ஊர்களையும், மலைகளையும், ஆறுகளையும் குறிப்பிட்டாய். உலகின்
புவியியலைப் பற்றி இவ்வளவு பரந்த ஞானத்தை எவ்வாறு பெற்றாய்?” என்று ஆச்சர்யத்துடன்
வினவினான்.
அதற்குச் சுக்ரீவன்
स माम् जिघांसुः दुष्टात्मा वाली प्रव्यथित
इन्द्रियः |
परिकालयते क्रोधात् धावंतम् सचिवैः सह || ४-४६-१
ततो अहम् वालिना तेन सानुबन्धः प्रधावितः |
नदीः च विविधाः पश्यन् वनानि नगराणि च || ४-४६-१२
அப்போது, பணிந்து வணங்கிய சுக்ரீவன், இராமனிடம் {பின்வருமாறு} சொன்னான், “சர்வத்தையும் விஸ்தாரமாகச்
சொல்கிறேன். வாலி, எருமையின் ஆகிருதியை {எருமை வடிவம்} கொண்டவனும், துந்துபி என்ற பெயரைக்
கொண்டவனுமான தானவனை மலய பர்வதத்தை நோக்கி விரட்டிச் சென்றபோது. அந்த மஹிஷன் மலயத்தின் குகைக்குள் பிரவேசித்தான். அவனைக்
கொல்ல விரும்பிய வாலியும் அந்த மலயத்திற்குள் பிரவேசித்தார் அப்போது [அண்ணனுக்குக் கட்டுப்படுபவனான நான்,
அங்கே குகையின்
துவாரத்தில் நிறுத்தப்பட்டேன். ஒரு வருடம் கடந்த பிறகும் வாலி வெளியே வரவில்லை.
பிறகு, பிலத்திலிருந்து ரத்தம்
வேகமாகப் பெருகி நிறைந்தது. அப்போது, அதைக் கண்டு பேச்சிழந்து
நின்ற நான், சகோதர சோகம் எனும்
விஷத்தால் பீடிக்கப்பட்டேன். பிறகு, அண்ணன் கொல்லப்பட்டது
வெளிப்படையானது என்ற புத்தியை நான் அடைந்தேன். மஹிஷன் {துந்துபி / மாயாவி} வெளியே வரமுடியாதபடி
முழுமையாக நாசம் செய்ய வேண்டும் என்று நினைத்த நான், பர்வதத்திற்கு ஒப்பான
பாறையைக் கொண்டு பிலத்தின் துவாரத்தை அடைத்தேன் அப்போது, அவர் ஜீவித்திருப்பதில்
நிராசையடைந்த நான், கிஷ்கிந்தையை அடைந்து, மஹத்தான ராஜ்ஜியத்தையும், ருமையுடன் தாரையையும்
அடைந்து நண்பர்களுடன் அங்கே வசித்திருந்தேன்.
பிறகு, அந்த தானவ ரிஷபனைக் கொன்று
வாலி திரும்பி வந்தார். அப்போது பயத்தால் செயலற்றவனான நான், கௌரவத்துடன் ராஜ்ஜியத்தைத்
திருப்பிக் கொடுத்தேன்.( துஷ்டாத்மாவான அந்த வாலி, கலங்கிய இந்திரியங்களுடன், அமைச்சர்களுடன் ஓடிச்
சென்றுகொண்டிருந்த என்னைக் கொல்ல விரும்பி குரோதத்துடன் விரட்டி வந்தார்.(
அத்தகையவனும், அந்த வாலியால்
விரட்டப்பட்டவனுமான நான், அவ்வாறு விரட்டப்படும்போது, விதவிதமான நதிகளையும், வனங்களையும், நகரங்களையும் கண்டேன்.
தொடரும்
No comments:
Post a Comment