வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 345
நேற்றைய
தொடர்ச்சி................
எனவே தென் திசை செல்லும்
வீரர்களே சீதையைக் காண முடியும் என்று சுக்ரீவன் திடமாக நம்பினான். அதனால்தான் அறிவும் ஆற்றலும் மிக்க ஹனுமனைத் தென் திசைக்கு நியமித்தான்.
அத்துடன் அங்கதன் போன்றோரையும்
அத்திசையிலே போகும்படி கட்டளையிட்டான், அவனது வீரியத்தையும் வேகத்தையும் நன்கறிந்த
சுக்ரீவன் இவனே இராம காரியத்தைச் சரிவரச் செய்து முடிப்பவன் என்றுணர்ந்து, ஹனுமனைச் சபை முன்னர் அழைத்தான்.
विशेषेण तु सुग्रीवो हनूमति अर्थम् उक्तवान् |
स हि तस्मिन् हरि श्रेष्ठे निश्चितार्थो अर्थ
साधने || ४-४४-१
वायु पुत्र समीपं तु गत्वा तं वाक्यं अब्रवीत |
श्रीनु मत वचनं वीर हनुमान
मारुत आत्मजा | अयं इक्ष्वाकु दयादो राजा रामः प्रतापवान् |
सर्व आत्मा सर्व लोकेशो
विष्णुः मानुष रूप धृ^ित |
- एनआर^इसिंह पुराण;
நரசிம்ஹ புராணத்தில் சொல்லியுள்ளபடி சுக்ரீவன்
ஹனுமனிடம் ‘இக்ஷ்வாகு குல வீரனான இந்த இராமன் இந்த பிரம்மாண்டத்தின் ஆத்மா, மனித
உருவில் வந்த மகாவிஷ்ணு’ என்று கூறுகிறான்.
“வானரர்களில் உத்தமனே!
வாயுவின் புதல்வனே!! உனது வீரமும், வேகமும், இப்புவியில் எவரிடம் உண்டு?. மேகமும்
உனது வேகம் கொண்டதன்று என்று நாங்கள் அனைவரும் நன்கறிவோம். நீ இதனை
மறந்தனையா? வாயுவின் வேகம் உனது
சொத்தல்லவா? நீரிலும், வானிலும் அனாயாசமாய்ப் பாய்ந்து பறந்து செல்லும் கதியை உனக்கு
நினைவூட்ட வேண்டுமோ? நீ புகாத இடமும், அறியாத பிரக்ருதிகளும் உண்டோ? வானர வல்லவ!
வரையறை அற்ற வீரம் படைத்தவனே!
गतिः वेगः च तेजः च लाघवम् च महाकपे |
पितुः ते सदृशम् वीर मारुतस्य महा ओजसः || ४-४४-५
உனது கதியும், வேகமும்,
ஆத்ம சக்தியும், எதையும் எளிதில் முடிக்கும் பேராண்மையும், உன்னை உனது தந்தை வாயு
பகவானுக்கு நிகராக்குகின்றன என்பது நாங்கள் அறியாததா?
तेजसा वा अपि ते भूतम् न समम् भुवि विद्यते |
तत् यथा लभ्यते सीता तत् त्वम् एव अनुचिंतय || ४-४४-६
உனது ஆற்றலுக்கு மாற்றொண்டு உண்டோ? ஆகவே
பிராட்டியைத் தேடிக் கண்டுபிடிப்பது உன் ஒருவனாலன்றோ ஆகவேண்டும்.
त्वयि एव हनुमन् अस्ति बलम् बुद्धिः पराक्रमः |
देश काल अनुवृत्तिः च नयः च नय पण्डित || ४-४४-७
எடுத்த கருமத்தை முடித்து
வைக்கும் வல்லுனன் நீ, கலைஞனும் நீயே. பலம், புத்தி, பராக்கிரமம், தேச
காலத்துக்குகந்தபடி செயல்களைச் செய்து முடித்தல், நீதி நெறிமுறை பிறழாமை ஆகிய இவ்வொவோன்றும் உன்னிடமே குடிகொண்டு
இருக்கின்றன என்பதும் நாங்கள் அறிந்ததே. ஆகவே ஆஞ்சநேய! அண்ணலின் ஆசி கொண்டு அவன்
அலுவலின் வெற்றியைக் காண வைப்பவன் நீயே தவிர, மற்றோருவருமில்லை என்பது எங்கள் எண்ணமும்
நம்பிக்கையும். நீயும் அதை மறக்காமலிருப்பாயாக” என்றான்,
தொடரும்
No comments:
Post a Comment