வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 335
மீண்டும் வால்மீகியிடம்
வருவோம்.
சுக்ரீவன் வானரங்களிடம் சொல்கிறான்”
இங்கு தேடி அப்பால்
சென்றால், ஜாதரூபசிலம் எனப்படும் பொன்மலையைக் காண்பீர்கள். அங்குதான் புனிதமான, நீல
ஆடை அணிந்த பன்னகக் கடவுளான ஆயிரம் தலைகொண்ட அனந்தனெனும் ஆதிசேஷன்
இருக்குமிடம். அம்மலையின் உச்சியில் பொன்னொளி வீசி கண்ணைப் பறிக்கும் பனைமரம்
அதன் கொடியாய் ஜோதியுடன் பிரகாசித்து விளங்கும்.
அதற்கப்பாலிருப்பதுதான்
உதய பர்வதம். அதன் வேதியுடனிருக்கும் கொடிமுடியானது வானளாவி பொன்மயமாய் நூறு யோசனை விஸ்தீரணம்
உள்ளதாய்ச் சூரியனைப்போல் ஜொலித்துக்கொண்டிருக்கும். அங்கும் சென்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். மகாவிஷ்ணு திரிவிக்கிரம
அவதாரத்தில் (வாமன் அவதாரம்)முதலடியை வைத்த ஸெளமனஸம் எனப்படும் திவ்விய க்ஷேத்ரம்
அதுதான். அவ்விடத்தில் சூரியன் ஜம்புத்வீபத்தை வடபுறமாக வலம் வந்து அச்சிகரத்தை
யடுத்துச் செல்வதைக் காணலாம். மிக்க தூயதான காட்சி அது. வைகாநாசர், வாலகில்லியர் மற்றும் தலைசிறந்த தபோதனர்கள்
— அங்குக் காணப்படுவர். அங்கும் சீதாபிராட்டியைத்
தேடவேண்டும். அச்சிகரம் முற்காலத்தில் பூமிக்கும் விண்ணுலகுக்கும் வாயிலாக ௮மைந்திருந்தது. அதற்குப் பூர்வதிக்கென்று நாமதேயம்.
அதற்குமேல் உங்களால் செல்லமுடியாத
ஒரே இருண்ட புகைபோன்ற சூனியம் தான் தோன்றும்: அந்த இடம் மானிடர்களுக்குப் புலனாகாது.
அது தேவர்கள் வசிக்கும் இடம். வானரர்கள்
போகக்கூடியது இதுவரையில் தான். இவ்வுதயமலையை அடைந்து தேடுங்கள். எல்லாம் ஒரு
மாதத்திற்குள் இம்முயற்சி செய்து முடித்தாக வேண்டும்.
மைதிலியைப் பற்றி விஷயம்
தெரிந்து கொண்டு காரியத்தை முடித்தவர்களாய்த் திரும்பி வருவீர்களென்று
நம்புகிறேன். இந்திரனுக்குப் பிரியமான இத்திக்கில் தேடி வந்து கருமம் முடிந்தவர்களாய்க்
களிப்புற்றிருப்பீர்கள்'' என்று அத்திசை பூராவும் விவரித்து விடை கொடுத்தனுப்பினான் சுகீரீவன்.
தொடரும்
No comments:
Post a Comment