வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 349
இராமன் ஹனுமனிடம் “சீதையை
உன்னால்தான் கண்டு பிடித்துக் கொண்டு வர
முடியும் என நானும் திடமாக நம்புகிறேன். அப்படி நீ சீதையைச் சந்திக்க
நேர்ந்தால் அப்பொழுது இந்தக் கணையாழி
உனக்குப் பயன்படும்; இதன் மூலம் நீ என்னால் அனுப்பப்பட்டவன் என்பதைச் சீதை
தெரிந்து கொள்வாள்”” என்று கூறினான்,
அந்தக் கணையாழிக்கு
அவ்வளவு முக்கியத்துவம் ஏன்? வால்மீகி அதைப் பற்றி விசேஷமாக ஏதும் எழுதாவிடினும்
உரையாசிரியர்கள் பேசாமல் இருப்பார்களா? அவர்கள் அந்த மோதிரம் எப்படிப்பட்டது என்று
சொல்கிறார்கள்.
suvarNasya su
varNasya su-varnasya a~Nguliiyakam
सुवर्णस्य सुवर्णस्य सुवर्णस्य आङ्गुलीयकम्
அதாவது ஒரு வார்த்தை விளையாட்டு. அதாவது முதல் suvarNasya என்றால் தங்க மோதிரம்.
அதாவது இரண்டாவது su varNasya அதிகமாக மின்னும் என்று
பொருள் மூன்றாவது su-varnasya என்பதற்கு நல்ல
எழுத்துக்கள் பொறிக்கபட்ட என்று பொருள் அதாவது நல்ல எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட
ஜொலிக்கும் உயர் ரக தங்கத்தால் ஆன மோதிரம் என்று பொருள். அதில் மேலே
ஸ்ரீ என்று பொறிக்கப்பட்ட கல்லும் கீழே ரா .. மா என்று பொறிக்கப்பட்ட
இரண்டு கற்களும் இருந்தன.
மோதிரம், இராமரின் அன்பு மற்றும்
நம்பிக்கையின் அடையாளம். இது சீதையை மனதளவில் உறுதிப்படுத்தவும், இராமரின் வருகையை உறுதி
செய்யவும் உதவுகிறது. ஹனுமன்,
இந்த உணர்ச்சி
முக்கியத்துவத்தை சீதைக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டவர்.. ஹனுமனின் பக்தி, இந்த மோதிரத்தை சுமந்து
செல்லும் புனிதப் பணிக்கு அவரை தகுதியாக்குகிறது. ஹனுமன், சிவனின் அம்சமாக, விஷ்ணுவின் அவதாரமான
இராமருக்கு மோதிரத்தை எடுத்துச் செல்வது, ஹரி-ஹர ஒருமையை
வெளிப்படுத்துகிறது. இது ஆன்மீக ரீதியாக முக்கியமானது.
இங்கு ஒரு கேள்வி
எழுகிறது. இராமன் அந்த மோதிரத்தை இளவரசனான அங்கதனிடம் அளிக்காமல் ஹனுமனிடம் ஏன்
கொடுத்தான்?
अनवत्र युवराजे बलाध्यक्षे अङ्गदे सति हनुमतः
स्वतन्त्रतया पुरस्कारः अभिज्ञानप्रदानादिकं च अनुचितम्।
அங்கதன் இளவரசனாகவும், படைத்தலைவராகவும்
இருக்கும்போது, ஹனுமன் தனிப்பட்ட முறையில்
பரிசு பெறுவது, சின்னம் வழங்குவது போன்றவை
பொருத்தமற்றவை." என்று சில குரல்கள் எழ வாய்ப்புண்டு.
இதற்கு சில உரையாசிரியர்கள் . சொல்வதாவது “एवं च आक्रमणीयं अंगदं
अपाहाय विश्वासनीयो हनुमति बिशुषा पुरस्कारादिकं युक्तं एव அங்கதனுக்கு இளவரசனாக
மிகச் சிறிய வயதில் முடிசூட்டப்பட்டதே ஒழிய அவனுக்கு போதிய ஞானமும் அனுபவமும்
இல்லை என்பதனால் அவனிடம் மோதிரத்தை அளிக்கவில்லை.
அப்படி என்றால் இன்னொரு
கேள்வியும் எழும் ‘பின்னர் ஏன் அங்கதனுக்கு இளவரசனாக முடிசூட்டப்பட்டது?” இதற்கு
உரையாசிரியர்கள் சொல்வதாவது. तथा च अंगदस्य ज्ञातित्वात् आविष्कारीयत्वात् अपरित्यगेन
रक्षनीयत्वाद्विनीतम विधाय यौव राज्ये अभिशेचनीयत्वात् च रक्षना यौवराज्य अभिशेचन
कार्य नियोजनादिकम् - मन्तिनाः च हनुमताः सकल कार्येषु विश्वसनीयस्य स्वतंत्रे ना
आरादिकम युक्तम् एव ஒரு அரசன் இறந்து போனால்
அவனுடைய இரத்த சம்பந்தம் உள்ளவர்களே பதவிக்கு வரவேண்டும் என்ற நியதியை வைத்து
அங்கதனுக்கு முடி சூட்டப்பட்டது.
தொடரும்
No comments:
Post a Comment