Monday, October 6, 2025

 




வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

வடவாக்னி

 

பதிவு எண் 334

 

கல்கி ஆன் லைன் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையைத் தருகிறேன். இதை எழுதியவர் இந்திராணி தங்கவேல். அவருக்கும் கல்கி நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


முத்தையா பதிவின் தொடர்ச்சி .............

  

இதுவே காலப்போக்கில் பூமியில் தோன்றிய தட்பவெட்பநிலை, சீதோஷ்ண நிலை இவை யாவும் உயிரினங்கள் வாழ்வதற்கு உண்டான பருவ கால மாறுதல்களை உருவாக்கியது. பிரம்ம சிருஷ்டியில் அகப்பட்ட ஜீவன்கள் அனைத்தும் பூமியில் கல், பாறையின் வடிவில் ஜீவ தலையில் சிக்கிக் கொண்டது.

 


இதுபோல் கல், பாறை போன்ற ஜடத்தின் மொத்த உருவமாக இருந்த உயிரினங்கள் அனைத்தும் அக்னியின் தொடர்பினால் அதன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை சந்திக்கத் தொடங்கியது. முதலில் செடி, கொடி, நுண் தாவரங்களாக உருவெடுத்த உயிரினங்கள், பின்னர் நீரில் மீன் இனங்களாகத் தோன்றி, அதன் பின் நிலத்தில் வசிக்கக்கூடிய உயிரினங்கள் தோன்றியது. இவையே நிலத்தில் ஊர்ந்தும், தவழ்ந்தும் பின் பறந்தும் முடிவில் நாற்கால் பிராணிகளாக வாழும் விலங்குகளாக சுற்றித் திரிந்து வந்தன. இதன் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சியின் தொடர்ச்சி என்பது ஆதிகால வனவாசிகளாக, பழங்குடி மக்களாக வாழ்ந்து வந்த இனமே மனித இனம் ஆகும்.

 


பின்னர், ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை தொட்ட பரிணாம வளர்ச்சியின் உச்சக்கட்ட சிகரத்தை எட்டிப் பிடித்தது மனித இனம்தான். காரணம், அறிவு வளர்ச்சியில் மாற்றம் உண்டாகி பகுத்தறிவு என்ற 'புத்தியே' மனிதனின் இத்தனை மாற்றங்களுக்கும் காரணமாகியது.

 


இந்த மாற்றமே மனிதனுக்கு பேசும் தனித்திறமையை வழங்கியது. அந்தப் பேச்சின் வழியே மனித இனம் சொல், மொழி, எழுத்து, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் போன்ற அறிவு நிலையின் மேன்மைகளை அடைந்தது என்பது வடவாக்னியின் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள்.

 


வடவாக்னி அதன் சீற்றத்தை நமக்கு உணர்த்துவதால் என்ன நன்மை ஏற்படுகிறது என்றால், பூமியில் ஆங்காங்கே திடீர் திடீரென்று உண்டாகும் எரிமலைகள் வடவாக்னியின் சீற்றத்தை நமக்கு உணர்த்துகிறது. சில சமயம் நடுக்கடலில் உண்டாகும் எரிமலையின் நெருப்பு குழம்பினால் பல புதிய தீவுகள் உண்டாகின்றன என்பது நாம் காணும் செய்தியாகும்.

 

பூமி இன்னமும் குளிர்ந்து போகவில்லை என்பதை எரிமலையின் சீற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றது. அப்படி ஒருவேளை வடவாக்னியின் தகிக்கும் உஷ்ணம் குளிர்ந்துபோனால் அது ஒரு மாபெரும் பிரளயத்தையும் உண்டாக்கி விடும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். வடவாக்னியின் அழுத்தத்தினால் உண்டாகும் இயற்கையின் பேரிடர் எரிமலையை விட பன்மடங்கு ஆபத்தானது. பூகம்பம் போன்ற இயற்கையின் பேரிடர்களை விட, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பலத்த உயிர் சேதம் மற்றும் பொருட் சேதத்தையும் விளைவிக்க வல்லது.




தொடரும்

 


No comments: