Wednesday, October 8, 2025

 


வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 336

 

 

சுக்ரரீவன்‌, வினதனின்‌ தலைமைகொண்ட மாபெரும்‌ வானர சேனையை கிழக்குத்‌ திக்கில்‌ வைதேகியைத்‌ தேடிவருமாறு அனுப்பிவிட்டு, அங்கதன்‌, அனுமன்‌, நீலன்‌, ஜாம்பவான்‌, கவயன், கவாக்ஷன்‌, மைந்தன்‌, த்விவிதன்‌, சரபன்‌, கந்தமாதன்‌ முதலிய புகழ்படைத்த வானர வீரர்களை அழைத்தான்‌. இவர்களோ மகா சூரர்கள்‌;  வேகமும்‌ ஆண்மையும்தான்‌ இவர்கள்‌ பிறவி குணம்‌ ; வெற்றி என்பதே இவர்கள் வாழ்வின் லட்சியம். அக்னியின்  புதல்வன்‌ நீலன்‌; வாயுகுமாரன்‌ அநுமன்; பிரும்மதேவரின்‌ மகன்‌ ஜாம்பவான் பொறுக்கியெடுத்த இத்தலைவர்களை ஒன்றுதிரட்டி அங்கதனை மூன்னிட்டு, மதப்பிடமுடியா திறன்கொண்ட, தேர்ந்தெடுத்த வானர சேனைகளுடன்‌ தெற்கு திக்குச்சென்று தேட அப்பிரதேசத்தைக்‌ கட்டங் கட்டமாக விவரித்‌துக்‌ காட்டினான்;


 

“வானர வீரர்ளே! வெற்றிபெற்று வருவீர்களாக! இராமகாரியத்தை முடிப்பதையே  கருமமாய்க் கொண்டவர்களே! உங்களையே நம்பியிருக்கிறோம்‌ என்று சொல்லவும்‌ வேண்டுமா? நீங்கள்‌ தெற்கு திக்கு நோக்கிச்‌ செல்லுங்கள்‌. தெற்கே விந்திய மலையை ஒரே பாய்ச்சலாய்‌ அடைவீர்கள்‌ என்று தெரியும். அதைக் கடந்தால் நர்மதை, பகவதி, கிருஷ்ணவேணி, ‌எனும்‌ மகாநதியைத் தாண்டினால்  பாவனமான வரதை, மேகலை, உத்கலை, தசார்ணம்‌, அஸ்வவந்தி, அவந்தி , முதலிய நாடுகள்‌ ஒன்றின்பின்‌ ஒன்றாகக்‌ காட்சியளிக்கும். ‌இங்கு காடுகளிலும்‌ மலைகளிலும்‌ நகரங்களிலும்‌, கிராமங்களிலும்‌ உட்புகுந்து நன்கு கவனித்து எல்லா இடங்களிலும்‌ சீதையைத்‌ தேடவேண்டும். இதன்பின் ‌ விதர்ப்‌பம்‌, ரிஷகம்‌, மாகிஷம்‌, வங்கம்‌, கலிங்கம்‌, கெளசிகம்‌, முதலிய தனித்தனி நாடுகளைக் காண்பீர்கள்‌. நுட்பமாயும்‌ விரைவாகவும்‌ ஓரிடமும்‌ விடாது தேடிப்‌ பார்த்தாகவேண்டும்‌.

 

तथा वन्गान् कलिन्गाम् च कौशिकान् च समंततः |

अन्वीक्ष्य दण्डक अरण्यम् स पर्वत नदी गुहम् || ४-४१-११

नदीम् गोदावरीम् चैव सर्वम् एव अनुपश्यत |

तथैव आन्ध्रान् च पुण्ड्रान् च चोलान् पाण्ड्यान् केरलान् || ४-४१-१२

 

“இதன்பின்‌ தண்டகாரணியத்தைக்‌ கடந்து கோதாவரி நதியைத்‌ தாண்டி ஆந்திர நாட்டைப்‌ பரிசோதியுங்கள். அப்புறம் கவனிக்க வேண்டியவை புண்டரம் (கிழக்கு தக்காணம் ஆகிய வடக்கு கன்னடம் ஆகிய நாடு சோழ தேசம், பாண்டிய நாடு, கேரள பிரதேசம் ஆகிய நாடுகள்.

 


No comments: