Saturday, October 4, 2025

 




வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

வடவாக்னி

 

பதிவு எண் 332

 


மன்னர்களுக்கும், பிறருக்கும் என் குலத்தவரைக் காக்கும் அதிகாரம்  இருந்தும்,  வாழ்க்கையின் இன்பங்களைத் தேர்ந்தெடுத்து, கடமைகளைத் தள்ளிப் போட்டு, அவர்களைக் காக்காமல் இருந்தனர். எனவே, நான் அவர்களிடம் கோபம் கொள்ள நியாயம் இருக்கிறது. நானே அநீதியைத் தண்டிக்கவல்ல படைப்பின் தலைவனாவேன். நான் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய வல்லனல்லேன்.  இக்குற்றங்களைத் தண்டிக்கவல்லவனாயிருந்தும், நான் அதைச் செய்யாமலிருந்தால், மனிதர்கள் மீண்டும் இதே வகை அழித்தொழிப்புகளையே செய்வார்கள். எனது கோபத்தீ இவ்வுலகை எரிக்கத் தயாராயிருக்கிறது. அதைத் தடுத்தால், அஃது எனது சக்தியையும், என்னையும் சேர்த்து எரித்துவிடும்.(. ஆசான்களே, நீங்கள் எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, எனக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாகும்படி ஒரு வழியை எனக்குக் காட்டுவீர்களாக." என்றார் {ஔர்வர்}".(

 


அதற்கு அந்தப் பித்ருக்கள், "உலகங்களை எரிக்கக் காத்திருக்கும் உனது கோப நெருப்பை, நீருக்குள் தூக்கி வீசுவாயாக. அஃது உனக்கு நன்மையைத் தரும். நிச்சயமாக, உலகங்கள் (அதன் அடிப்படைத் தேவையாக) நீரை நம்பியே இருக்கின்றன. சாறு {நீர்மை கொண்ட} அனைத்துப் பொருட்களிலும் நீர் இருக்கிறது. உண்மையில் இந்த முழு அண்டமே நீரால் ஆனதுதான். எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவனே, உனது கோபத்தின் நெருப்பை நீரில் விடுவாயாக.) ஓ பிராமணா, நீ விரும்பினால், அந்தக் கோபத்தின் நெருப்பைப் பெருங்கடலில் விடு, அங்கிருக்கும் நீரை அஃது உட்கொண்டபடி இருக்கட்டும். ஓ பாவங்களற்றவனே, உனது வார்த்தையும் மெய்யாகும், உலகங்களும், தேவர்களும் அழிய மாட்டார்கள்" என்றனர் {பித்ருக்கள்}".(20)

 


 அதன் பிறகு ஔர்வர் தமது கோபத்தின் நெருப்பை, வருணனின் வசிப்பிடத்தில் {மேகத்தின் வசிப்பிடமான கடலில்} விட்டார். பெருங்கடலுக்குள் விடப்பட்ட அந்த நெருப்பு அதன் நீரை உட்கொண்டு, பெரும் குதிரையின் தலை போன்ற வடிவத்தில் இருந்தது. எனவே, அதை வடவாமுகம் {வடவாமுக அக்னி} என்று வேதம் அறிந்தவர்கள் அழைத்தனர்.  அதன் வாயிலிருந்து பெரும் நெருப்புக் கிளம்பி அந்தப் பெருங்கடலின் நீரை உட்கொண்டது.

 

 


இன்னும் சில உரையாசிரியர்கள் "அவ்விடத்தில் அந்த வடவாமுகாக்னியைக் கண்டு ஜலத்தில் வசிக்கிறவைகளும், வலுக்கொண்டவைகளும் அலறும் பிராணிகளுடைய சப்தமும் கேட்கப்படுகிறது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அங்கு அந்த ஜல சமுத்ரத்தில் வாஸஞ்செய்யும் ப்ராணிகள் பல பராக்ரமங்கள் மிகுந்திருக்கப் பெற்றவராயினும் அந்தப் படபாக்னியைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் உரக்க இறைச்சலிடுவது செவிப்பட்டுக் கொண்டிருக்கும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அக்கடலையும் தாண்டிச் செல்வீர்களாயின், நன்னீர்க்கடல் காணப்படும். அதனிடையில்தான் படபாநலம் எரிந்து கொண்டிருக்கின்றது; அதனாலேதான் ஊழிகாலத்தில் எல்லா நீரிரும் பருகப்படுகின்றது, அக்கடலிடையில் வாழ்கின்ற சிறந்த உயிர்களும் அந்தத் தீயைக் கண்டச் சங்கொண்டு கூவுகின்றன; அங்கு அவ்வொலி மிக வொலிக்கின்றது" என்று சொல்கின்றனர் )

 


தொடரும் 

No comments: