வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமனின் அறிவுரை
பதிவு எண் 380
ஹனுமான் அங்கதனிடம் ஒரு அரசகுமரனின் புத்திக் கூர்மைக்கு வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுவதைப் பார்த்தோம். அந்தப் பதிவின் தொடர்ச்சி........................
இந்த அடிப்படையில் தான் ஹனுமன் அங்கதனைப் பார்த்துச் சொல்வது
1. கேட்கும் ஆர்வம்: கேட்கும்போது இது சரியா தவறா என்று தீர்மானித்துக் கட்டுப்பாட்டான புத்தியோடு முடிவெடுப்பது.
2. நன்றாகாக் கேட்கும் தன்மை.: என்ன சொல்லப்படுகிறதோ அதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.
3. கேட்டதை கிரகிக்கும் ஆற்றல்: அதன் அடிப்படைப் பொருளை முழுவதுமாகப் புரிந்து கொள்வது
4. கிரகித்த பிறகு ஏற்றுக் கொள்ளும் தன்மை: நல்ல ஞாபக சக்தியுடன் முன் கூறிய விஷயத்திற்கு ஆதரவான காரணத்தைக் கூறும் ஆற்றல்.
5. விவாதித்தல்:சில சமயங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் ஆற்றல் இருத்தல் வேண்டும்
6. கேட்கும் விஷயத்தின் தன்மை பொருளை தெரிந்து கொள்ளுதல்.
7. சொல்பவனின் நோக்கம் அறியும் ஆற்றல்
8. தத்வ ஞானத்தைப் பெறுதல்; தேகபலம், அறிவு, இயல்பான குணம், இந்திரிய பலம். இத்தத்துவங்களை பிரித்தறியும் ஞானம்.இவைகள் பெற்றவன் உண்மையான ஞானி. அங்கதா! உனக்கு அரசியலுக்கு உதவும் நான்கு திறமைகளை கூறுகிறேன். அவை இணக்கம் (சாம) பரிசுகளால் ஊக்கமளித்தல் (தான) பகைவர்களிடையே கலக்கம் (விகற்பம்) ஏற்படுத்துதல் (பேதம்) வன்முறை, தண்டனை அளித்தல் (தண்டம்) இதற்கும் அப்பாற்பட்ட 14 சிறந்த குணங்கள் உன்னில் நிறைவு படவேண்டும். அது உயர்ந்த சான்றோர்களில் இயல்பாகும்.
அவைகள்:
· காலதேசத்தின் ஞானம்
· உறுதி, சலியாத உழைப்பு
· துன்பங்கள் தாங்கும் வல்லமை
· எல்லா விஷயங்களின் ஞானம்
· புத்திசாலித்தனம்
· உற்சாகம்
· கொள்கைகளையோ, கருத்துகளையோ ரகசியமாக வைத்துக் கொள்ளும் ஆற்றல்
· வீரம்
· பகைவனுடைய பலத்தை தன் பலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் தன்மை
· பரஸ்பர பாராட்டு
· அடைக்கலம் அடைந்தவரிடம் கருணை காட்டல்
· நிலையான புத்தி
· கம்பீரம்
· நன்றி உணர்ச்சி
தொடரும்
No comments:
Post a Comment