Thursday, December 4, 2025

 




 

வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஹனுமனின் அறிவுரை

 

பதிவு எண் 377

 

 


தாரன் சொன்னவற்றைக் கேட்டு அங்கதன் மௌனமாக இருந்தான். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதை ஹனுமன் உணர்ந்தான், இனியும் பேசாமல் இருந்தால் வந்த காரியம் கெட்டுவிடும் என்பதால் அங்கதனை நோக்கிப் பேசத்தொடங்கினான்.



===========================================

बुद्ध्या हि अष्ट अंगया युक्तम् चतुर् बल समन्वितम् |

चतुर् दश गुणम् मेने हनुमान् वालिनः सुतम् || ४५४२

===========================================

 

 

 

“அன்புள்ள அரசகுமாரனே! உன்னிடம் புத்தி கூர்மைக்கு வேண்டிய எட்டு தன்மைகள் (குணங்கள்) நிறைந்து இருக்கும்  என்று நான் கருதினேன். (“ஒரு சராசரி மனிதனின் நுண்ணறியுந்திறன் எட்டு அங்கங்கள்(அறிவின் எட்டுக் கூறுகள்), நான்கு வகை வலிமைகள்,  பதினான்கு சிறப்புக் குணங்கள்  கூடியது என்று {பின்வருமாறு} சொல்லப்படுகிறது,  -शुश्रूषा शवाणां चैव ग्रहाणां धारणं तथा | उहा अपोहा अर्थ विज्ञानं तत्त्व ज्ञानं च धी गुणःஅதாவது,

 


1. சுஷ்ரூஷம் - கூர்மையாக கவனித்தல்,


2.  சிரவணம் - கருத்தில் கொள்ளுதல்,


3. கிரஹணம் - ஈர்த்து வைத்துக் கொள்ளுதல் {நினைவில் நிறுத்தல்},


4. தாரணம் - நினைவில் மீட்டல்,


5. ஊஹம் - ஊகித்தறிதல்,


6. அபோஹம் - நுட்பமாகப் பகுத்தறிதல்,


7. அர்த்தவிஜ்ஞானம் - அர்த்தங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளுதல்,


8. தத்துவஞானம் - {உண்மையைப் புரிந்து கொள்ளுதல்} என்பன அந்த குணங்களாகும்.

 

----------------------------

 

நால்வகை பலங்கள் என்பன



1. மனோபலம் - மனவலிமை,


2. பாஹுபலம் - தோள்வலிமை,


3. உபாய பலம் - உத்தி வலிமை,


4. பந்து பலம் - உறவினர் வலிமை என்று சொல்லப்படுகின்றன. मनो बल, बाहु बल, उपाय बल, बंधु बल,




visit my blog seshadrinadhan.blogspot.com




தொடரும்.

 

No comments: