Monday, December 1, 2025

 



 


வால்மீகியின்


கிஷ்கிந்தா காண்டம்

ஸ்வயம்ப்ரபை பகுதி

பதிவு எண் 374



நேற்றைய தொடர்ச்சி



ஆத்யாத்ம இராமாயணத்தில் ஸ்வயம்ப்ரபை இராமரைக் கண்டதும் உணர்ச்சி பொங்க பேசுவதின் தொடர்ச்சி.............



===========================================
कथं त्वां देव जानीयां स्तोतुं वाविषयं विभुम् ।
नमस्यामि रघुश्रेष्ठं बाणासनशरान्वितम् ।
लक्ष्मणेन सह भ्रात्रा सुग्रीवादिभिरन्वितम् ॥ ७७॥
=========================================



நான்‌ தங்கள்‌ மாயையிற்‌ கட்டுண்டவள்‌. மாயா குணங்களுக்கு வேறுபட்டவரும்‌, அக்குணங்களின்‌ ஆஸ்ரயரும், , வியாபகருமாகிய தங்களை நான்‌ எவ்விதம்‌ தெரிந்து கொள்வேன்?.. எவ்வாறு ஸ்தோத்திரம்‌ செய்வேன்‌?.



ஓ இரகு ராம! தனுசு, , பாணம்‌ இவற்றோடு கூடிய சகோதரன் இலக்ஷ்மணனுடனும், , ஸ-க்ரீவர்‌ முதலினோருடலும்‌ கூடிய தங்களை நான் நமஸ்கரிக்கிறேன் என்றாள்.



==========================================
அருள் நிறைந்த ராமா!
அழிவை நீக்கும் கருணை நிதியே!
அந்தகாரக் குகையில் சிக்கிய உயிர்கள் —
அனுதினம் உன் பாதம் நினைக்கின்றன!

============

நான் இங்கு காவல் காத்து நிற்கின்றேன்,
நரகமெனும் இருள் சூழ்ந்திட,
உன் திருவடி நினைவு தான் —
என் உயிர்க்கு ஒளி, என் உள்ளம் தாங்கும்!

===============

அருள் தருவாய்!
அழிவை நீக்குவாய்!
அனுதினம் உன் நாமம் ஓதுவோர் —
அவர்களை நீ காப்பாய்,
என்னை நீ கருணையால் அரவணைப்பாய்!

=============

ராமா!
உன் பாதம் தான் பரமபதம்,
உன் நாமம் தான் பரமமருந்து,
உன் அருள் தான் பரமசுகம் —
அதனை நான் வேண்டுகின்றேன்!
==========================================




இவ்வாறு ஸ்வயம்பிரபை ஸ்கோத்திரம்‌ செய்தவுடன்‌, வணங்கியவர்களுக்கு ஆசி வழங்கிய இரகு சிரேஷ்டர்‌, தன்னிடம்‌ மிக்க பக்தியடைய ௮ந்த ஸ்வயம்பிரபையைப்‌ பார்த்து இப்போது உன்‌ மனதில்‌ உள்ள கோரிக்கை யாது? என்று வினவினார்‌.



தொடரும்..........
visit my blog seshadrinadhan.blogspot.com

No comments: