Friday, December 5, 2025

 



காலை வணக்கம்

 

வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

ஹனுமனின் அறிவுரை

 

பதிவு எண் 378

 

நேற்றைய தொடர்ச்சி................



 

ஹனுமான் அங்கதனிடம் ஒரு அரசகுமரனின் புத்திக் கூர்மைக்கு வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுவதைப் பார்த்தோம். அந்தப் பதிவின் தொடர்ச்சி........................

 



பதினான்கு குணங்கள் பொருந்தி இருக்கவேண்டும் அவையாவன

 

देशा कालजन्नत दार्ध्यं समस्त दुःख सहिष्णुता | सर्व विज्ञानंता दाक्ष्याम उर्जाः संवृत मंत्र | अविसंविदिता शौर्यं शक्तिजंत्वं कृतजंता | शरणा आगत वात्सल्यं अमरशत्वं अचलन



அதாவது,


1. தேசகாலஜ்ஞம் - இடம், நேரம் ஆகியவற்றை அறிதல், 2. தார்டியம் - கடுமை / மன உறுதி,


3. ஸர்வகிலேசஸஹிஷ்ணுதம் - தொல்லைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுதல்,


4. சர்வவிஜ்ஞானிதம் - அனைத்தையும் அறிதல் / எல்லாம் உணர்தல்,


5. தாக்ஷ்யம் - நிபுணத்துவம் / வல்லமை,

6. ஊர்ஜம் - விடாமுயற்சி,


7. ஸம்விருத மந்திரதம் - ஆலோசனைகளை வெளியிடாமல் மறைத்தல்


8. அவிஸம்விதிதம் - தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்தல் / அபத்தமாகப் பேசாதிருத்தல்,


9. ஷௌர்யம் - துணிவு,


10. சக்திஜ்ஞத்வம் - பிறரின் வலிமையை முழுமையாக அறிதல்,


11. கிருதஜ்ஞதம் - நன்றி மறவாமை,


12. சரணாகதவத்ஸல்யம் - அண்டியோரை அன்புடன் ஆதரித்தல்,


13. அமர்ஷத்வம் - தேவையான இடங்களில் கோபத்தை வெளிப்படுத்தல்,


14. அசாலனம் - நடுக்கமின்மை / கலக்கமின்மை / கலவரமின்மை என்பன அந்த குணங்களாகும்” என்றிருக்கிறது.


 

அஷ்டாங்க புத்தி – அறிவின் 8 கூறுகள்

 


| 1 | श्रुतम् (Shrutam) | கேள்வி மூலம் பெற்ற அறிவு (ஶாஸ்திரங்கள், உபதேசம்) |


| 2 | चिन्तनम् (Chintanam) | ஆழ்ந்த சிந்தனை, விவேகம் |


| 3 | धारणम् (Dharanam) | மனதில் நிலைத்துவைக்கும் திறன் |


| 4 | प्रयोगः (Prayogah) | அறிவைப் பயன்படுத்தும் திறன் |


| 5 | युक्तिः (Yuktiḥ) | நுட்பமான யோசனை, தந்திரம் |


| 6 | विवेकः (Vivekah) | நன்மை–தீமை வேறுபடுத்தும் அறிவு |


| 7 | स्मरणम् (Smaraṇam) | நினைவாற்றல், ஞாபக சக்தி |


| 8 | ज्ञानम् (Jñānam) | பரிபூரண அறிவு, ஞானம் |


visit my blog seshadrinadhan.blogspot.com

 

தொடரும்..............

 

No comments: