Wednesday, December 3, 2025

 




வால்மீகியின்


கிஷ்கிந்தா காண்டம்

ஸ்வயம்ப்ரபை பகுதி

பதிவு எண் 375


நேற்றைய தொடர்ச்சி



ஸ்வயம்பிபை ஸ்கோத்திரம்‌ செய்தவுடன்‌, வணங்கியவர்களுக்கு ஆசி வழங்கிய இரகு சிரேஷ்டர்‌, தன்னிடம்‌ மிக்க பக்தியடைய ௮ந்த ஸ்வயம்பிரபையைப்‌ பார்த்து இப்போது உன்‌ மனதில்‌ உள்ள கோரிக்கை யாது? என்று வினவினார்‌.


सा प्राह राघवं भक्त्या भक्तिं ते भक्तवत्सल ।

यत्र कुत्रापि जाताया निश्चलां देहि मे प्रभो ॥ ७९॥

त्वद्भक्तेषु सदा सङ्गो भूयान्मे प्राकृतेषु न ।

जिह्वा मे रामरामेति भक्त्या वदतु सर्वदा ॥ ८०॥



இதைக்‌ கேட்ட ஸ்வயம்பிரபை பக்தியுடன்‌ இராமனை வணங்கி “பிரபுவே! நான் ‌ எந்த ஜென்மம்‌ எடுத்த போதிலும்‌, அழிவில்லாக பக்தி தங்களிடம "எனக்கிருக்கும்படி. வரம்‌ கொடுக்க வேண்டும்‌, பிராகருதர்களாயினும்‌, தங்களுடைய பக்தர்களின்‌ சேர்க்கை எப்போதும்‌ எனக்கிருக்க வேண்டும்‌. என்‌னுடைய நாவானது எப்போதும்‌ பக்தியுடன்‌ இராம இராம என்றே கீர்த்தனம் செப்யவேண்டும்‌



मानसं श्यामलं रूपं सीतालक्ष्मणसंयुतम् ।

धनुर्बाणधरं पीतवाससं मुकुटोज्ज्वलम् ॥ ८१॥

-----------

अङ्गदैर्नूपुरैर्मुक्ताहारैः कौस्तुभकुण्डलैः ।

भान्तं स्मरतु मे राम वरं नान्यं वृणे प्रभो ॥ ८२॥



ஓ இரகுநந்தன! ஸீதை, இலக்ஷ்மணர் இவர்களுடன்‌ கூடியதும்‌ வில்‌, பாணம்‌, இவைகளைச்‌ தரித்ததும்‌, மஞ்சள்‌ பட்டாடை யுடுத்ததும், கிரீடத்தால்‌ பிரகாச முள்ளதும்‌, தோள்வளைகளாலும்‌, தண்‌டைகளாலும்‌, மூத்தாரங்களாளும்‌, கவசங்களாலும்‌ குண்டலங்களாலும். ‌ பிரகாசிப்பதும்‌, ஸ்யாமள வர்ணமுள்ளதுமாகிய தங்களுடைய ல்வரூபமே எப்போதும்‌ என்‌ நினைவில்‌ இருக்க வேண்டும்‌, தங்களுக்கு நமஸ்காரம்‌, வேறு வரம்‌ எனக்கு வேண்டாம்‌” என்று வணங்கிக்‌ கேட்டுக்கொண்டாள்‌.



ஸ்ரீராமர்‌, “ஓ மஹாபாக்யம்‌ செப்த ஸ்வயம்ப்ரபையே! ௮வ்‌விதமே ஆகட்டும்‌, நீ பதரிகாச்சிரமம்‌ சென்று, ௮ங்கு என்னைத்‌ தியானம்‌ செய்து கொண்டிருந்து, இந்த ஸம்ஸாரக்கடலைத்‌ தாண்டி, பரமாத்மவாகிய என்னை விரைவாக அடைவாய்‌” என்றார்.



ஸ்வயம்பிரபை, அமுத ஸாரம்போன்ற இராமருடைய மொழியைசக்‌ கேட்டு ௮வவிதமே பதரிகாச்சிரமம்‌ சென்று தன்‌ மனதில்‌ இரகு நாதரையே தியானம்‌ செய்து கொண்டிருந்து பிறகு சரீரத்தை விட்டு பரமபத மடைந்தாள்‌.

visit my blog seshadrinadhan.blogspot.com





தொடரும்

No comments: