வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமனின் அறிவுரை
பதிவு எண் 383
நேற்றைய தொடர்ச்சி
“ஹனுமனே! என்று அங்கதன் பணிவுடன் துவங்கினான்.
=================================
स्थैर्यमात्ममनःशौचमानृशंस्यमथाअर्जवम् - यद्व -
स्थैर्यम् आत्म मनः शौचम् आनृशंस्यम् अथ आर्जवम् |
विक्रमः चैव धैर्यम् च सुग्रीवे न उपपद्यते || ४-५५-२
भ्रातुः ज्येष्ठस्य यो भार्याम् जीवितो महिषीम् प्रियाम् |
धर्मेण मातरम् यः तु स्वीकरोति जुगुप्सितः || ४-५५-३
कथम् स धर्मम् जानीते येन भ्रात्रा दुरात्मना |
युद्धाय अभिनियुक्तेन बिलस्य पिहितम् मुखम् || ४-५५-४
==================================
"சுக்ரீவரைப் பற்றி உமக்கும் எனக்கும் தெரியாததென்ன இருக்கிறது. “உறுதி, ஆத்ம மன சுத்தம் {அகப்புறத்தூய்மை}, இரக்கம், நேர்மை, விக்ரமம், தைரியம் ஆகியவை சுக்ரீவரிடம் காணப்படுவதில்லை. எதிரியான அண்ணனுடன் சண்டையிடும்போது குகைவாயிலை மூடி ராஜ்யத்தைப் பெற்று அரசனாக முடிசூடி, அண்ணனின் மனைவியான தாரையை சுவீகரித்து சுகித்தவர். (கிஷ்கிந்தா காண்டம் 9ம் சர்க்கத்தில் சுக்ரீவன் வாலியுடன் உண்டான பகையை இராமனிடம் சொன்னபோது, மாயாவியுடனான யுத்தத்தில் அண்ணன் மாண்டுவிட்டான் என்று நினைத்து பிலத்தை அடைத்து வந்ததையும், இராஜ்ஜியம் தன் மேல் திணிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறானேயன்றி, தாரையைத் தன்னவளாக்கிக் கொண்டதைச் சொல்கிறானில்லை {4:9:21,22}. இது வாலி கொல்லப்படுவதற்கு முன் நடந்தது. ஆனால் வாலி கொல்லப்பட்டு நாட்கள் பலவும் கடந்த பின்னர் கிஷ்கிந்தா காண்டம் 46ம் சர்க்கத்தில் ராஜ்ஜியத்துடன் தாரையையும் அடைந்ததை இராமனிடம் சுக்ரீவன் சொல்கிறான் {4:46:8,9}. இதோ இப்போது இங்கே அங்கதன் தன் மாதாவை சுக்ரீவன் அபகரித்துக் கொண்டதை ஹனுமானிடம் வருத்தத்துடன் பதிவு செய்கிறான்.)
===================================
सत्यात् पाणि गृहीतः च कृत कर्मा महायशाः |
विस्मृतो राघवो येन स कस्य सुकृतम् स्मरेत् || ४-५५-५
लक्ष्मणस्य भयेन इह न अधर्म भय भीरुणा |
आदिष्टा मार्गितुम् सीताम् धर्मः तस्मिन् कथम् भवेत् || ४-५५-६
=====================================
நண்பருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு களியாட்டங்களில் காலத்தைக் கடத்தி வாளாவிருந்தவர். பின்பு இலக்ஷ்மணனின் கோபத்திற்குப் பயந்தே வானரர்களை சீதா பிராட்டியைத் தேடி வர அனுப்பியவர். அதர்மம் செய்வதில் பயமில்லாத கோழையான அவரிடம் தர்மம் இருப்பது எங்ஙனம்?
இராவணன் அதர்மம் செய்தான். அவனைத் தண்டிக்க வேண்டுமென்றே காரணத்தினால் அல்ல. என்னை இளவரசனாக முடிசூட்ட இசைந்ததும் அக்காரணத்தால் தான் என்பது எனது அபிப்பிராயம். அவருக்கு விரோதியான வாலியின் புதல்வன், ஒரு குற்றம் செய்தால் போதும்; உயிரழக்க வேண்டியவன்தான்.
visit my blog seshadrinadhan.blogspot.com
தொடரும்..................
No comments:
Post a Comment