துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 113
நேற்றைய தொடர்ச்சி
சுக்ரீவன்
இராமனிடம் வாலியால் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தையும் கூறினான்.
இராமனின் வாக்குறுதி
இவ்வாறு சுக்ரீவன் தனது உடலுக்கு ஏற்பட்ட துன்பத்தை रिपु सम मोहि मारेसि अति भारी என்பதன்
மூலமும் மனதிற்கு ஏற்பட்ட துன்பத்தை इहाँ साप बस आवत नाहीं என்பதன் மூலமும் செல்வத்துக்கு ஏற்பட்ட இழப்பை इहाँ साप बस आवत नाहीं என்பதன் மூலமும் இராமனிடம் முறையிட்டான்.
सुन सेवक दुःख दीनदयाला फरकि उठीं द्वै भुजा बिसाला॥7॥
சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு இராமனின் இரு புஜங்களும் துடித்தன..
எல்லாவிதமான சேவைகளையும் செய்யத் सब प्रकार कारिहोँ सेवकार्ड தயாராக இருக்கிறேன் என்று சுக்ரீவன் சொன்னதால் அவனுடைய மனக் குமுறலைக்
கேட்டு இராமனின் இரு புஜங்களும் துடித்தன என்று சொல்கிறார் துளசிதாசர்.
இரண்டு புஜங்களும் துடித்தன என்பதற்கு
உரையாசிரியர்கள் சில விஷயங்கள் சொல்கின்றனர். அதாவது இரு புஜங்களும் துடிப்பது
போருக்கான அறிகுறி.. வெறும் வாளை வீசி சண்டை என்றால் வலது புஜம் மட்டும்
துடிக்குமாம். வாலி வதம் பாணத்தால் நிகழ்த்தப் பட வேண்டும். அதனால் இரு புஜங்களும்
துடித்தன என்கிறார்கள்.
सुनु सुग्रीव मारिहउँ बालिहि एकहिं बान।
ब्रह्म रुद्र सरनागत गएँ न उबरिहिं प्रान॥6॥
தனது இரு கைகளையும் உயரே தூக்கி இராமன் சுக்ரீவனிடம் “சுக்ரீவா! கேள்.
நான் ஒரே பாணத்தினால் வாலியைக் கொன்று விடுவேன். பிரம்மா, சிவன் என்று எவரைச்
சென்று அவன் சரணடைந்தாலும் அவன் உயிரைக்
காப்பாற்ற முடியாது.
இதே கூற்றை அங்கதன் இராவணனிடம் கூறுகிறான்.
सुनु रावन परिहरि चतुराई। भजसि न कृपासिंधु रघुराई॥
जौं खल भएसि राम कर द्रोही। ब्रह्म रुद्र सक राखि न तोही॥
அங்கதன் இராவணனிடம் “நீ உனது கபட நடவடிக்கைகளை விட்டுவிட்டு
இராமனிடம் சரண் அடைந்துவிடு. இராமனைப் பகைத்துக் கொண்டால் உன்னை பிரம்மா, சிவன் இவர்கள் எவராலும் காப்பாற்ற முடியாது”
என்று சொல்கிறான்.
தொடரும்
No comments:
Post a Comment