Tuesday, May 12, 2026

 


காலை வணக்கம்

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 104

 

நேற்றைய தொடர்ச்சி

 

அதற்கு சுக்ரீவன் “ஐயனே! வாலியும் நானும் சகோதரர்கள் ஆவோம். எங்கள் இருவருக்குமிடையில் இருந்த அன்பை எவராலும் வர்ணிக்க முடியாது. இந்த நிலையில்  மயன்  என்ற அரக்கனின் மைந்தன் ஒருவன், மாயாவி என்ற பெயருடையோன் ஒரு முறை  எங்கள் ஊருக்குள் வந்தான். அவன் நடு இரவில் வந்து நகரத்தின் கோட்டை வாயிலில் நின்று வாலிக்கு அறைகூவல் விடுத்தான். எதிரியின் அறைகூவலைக் கேட்ட வாலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

  

धावा बालि देखि सो भागा। मैं पुनि गयउँ बंधु सँग लागा

* गिरिबर गुहाँ पैठ सो जाई। तब बालीं मोहि कहा बुझाई॥

 

“வாலி மாயாவியை நோக்கி ஓடினான்..அவனோ வாலியைக் கண்டதும் தப்பி ஓடலானான். “

 

तु मे भ्रातरम् दृष्ट्वा माम् दूरात् अवस्थितम् |

असुरो जात संत्रासः प्रदुद्राव तदा भृशम् ||

 

“நானும் எனது சகோதரனைத் தொடர்ந்து அவன் பின்னாலேயே ஓடினேன். அந்த மாயாவி  ஒரு மலைக் குகைக்குள் சென்று நுழைந்தான்.

 

अनुयातः माम् तूर्णम् अयम् भ्राता सुदारुणः |

तु दृष्ट्वा एव माम् रात्रौ द्वितीयम् महाबलः ||

 

 மாயாவிக்கு வாலியைக் கண்டதும் பயம். குகைக்குள் சென்றுவிட்டால் வாலி திரும்பி விடுவான் என நினைத்தான்.மேலும் வாலியின் பின்னால் நானும் ஓடிவருவதை மாயாவி கவனித்து விட்டான். ஒருவேளை குகைக்குள் மாயாவின் நண்பர்கள் இருக்கலாம். அதனால் வாலியை குகைக்குள் அழைத்து சென்றுவிட்டால் அங்கு நண்பர்களின் துணையுடன் வாலியைக் கொன்றுவிடலாம் என்று நினைத்து மாயாவி குகைக்குள் சென்றிருக்கலாம்.  வாலிக்கு அவனது பலத்தின் மீது அபார நம்பிக்கை. அதனால் அவன் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை  அப்பொழுது வாலி என்னையழைத்துக் கூறினான்.”

 

என்ன கூறினான்? அடுத்த பதவில்............

 


No comments: