Saturday, May 16, 2026

 

தொடரும்

 

காலை வணக்கம்

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 110

 

நேற்றைய தொடர்ச்சி

 

"(வாலி இறந்த அந்த உண்மையை) நான் எவ்வளவுதான் மறைக்க முயன்றபோதிலும் (गूहमानस्य मे - குஹமானஸ்ய மே), அமைச்சர்கள் எனது செய்கைகளை ஆராய்ந்து அந்த உண்மையை (तत्त्वं - தத்வம்) எப்படியோ அறிந்து கொண்டனர். அதன் பிறகு, அந்த மந்திரிகள் அனைவரும் ஒன்று கூடி வந்து, என்னை வற்புறுத்தி அரசனாக்கினர் (அபிஷேகம் செய்தனர்)." என்று சுக்ரீவன் சொல்வதாக வால்மீகி எழுதி உள்ளார். அதன் காரணம் அரசன் இல்லா தேசத்தின் மீது பகைவர்கள் படை எடுப்பர் என்று கருதியே தான் சொல்லவில்லை என்ற காரணத்திற்க்காக என்று உரையாசிரியர்கள் சொல்வதாக முந்தைய பதிவில் படித்தோம்.

.

.அதே நேரத்தில் ஆத்யாத்ம இராமாயணத்தில் சுக்ரீவன் तोडब्रवं॑ मृतो वाली गुहायां रक्षता हतः எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிட்டான்  என்று சொல்லபடுகிறது.

 

मंत्रिनह् पुर देखा बिनु साईं கிஷ்கிந்தையில் அரசன் இல்லை. இதைத் தெரிந்து பகைவர்கள் நாட்டின் மீது படை எடுத்து வரலாம் என்று கருதி அமைச்சர்கள் என்னை அரசனாக்கி விட்டனர் இப்படித்தான் வால்மீகி இராமாயணத்தில் வாலியிடம் बलात् अस्मिन् समागम्य मंत्रिभिः पुर वासिभिः || -१०-१० சுக்ரீவன் சொல்கிறான் ஆனால் துளசிதாசர் அதைப் பற்றி விரிவாக ஒன்றும் எழுதவில்லை. துளசிதாசர் இங்கு बरिआई॥ என்ற பதப் பிரயோகம் போடுகிறார். இதன் பொருள் அதாவது சுக்ரீவன் ‘எனக்கு அரசனாக வேண்டும் என்ற எண்ணம்/ஆசை இல்லை. ஆனால் அமைச்சர்கள் கட்டாயப்படுத்தி அரசனக்கிவிட்டனர்’ என்று சொல்லவருவதாகச் சொல்லப்படுகிறது.. ஆனால் ஆத்யாத்ம இராமாயணத்தில் இதையே मामनिच्छन्तमप्युत। राज्येडभिषेचनं चक्रु: सर्वे वानरमन्त्रिण:' என்று சொல்லப்படுகிறது.

 

சுக்ரீவனுக்கு அரசனாக வேண்டும் என்ற ஆசை வராததற்கு காரணம் என்ன? சகோதரன் இறந்து போன வருத்தம் மற்றும் அவனது மகன் அங்கதன் தானே அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம், ஆனால் அங்கதன் வயதில் மிகச் சிறியவன் . அவனுக்கு அனுபவம் இல்லை. ஆதலால் அவர்கள் அங்கதனை அரசனாக்கச் சம்மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

இங்கு உரையாசிரியர்கள் சில கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். உண்மையில் அங்கதன் கிஷ்கிந்தையின் அரசனாகிவிட்டால் சுக்ரீவன் காட்டிற்குச் சென்று இருக்கமாட்டான். இராமனைச் சந்தித்து இருக்கமாட்டான். இராவண வதமும் நிகழ்ந்து இருக்காது. இராவணன் பிரம்மாவிடம் என்ன வரம் வாங்கினான்? काहू के मरहिं मारें। बानर मनुज जाति दुइ बारें॥  எனது மரணம் மனிதன், வானரம் இவர்களைத் தவிர வேறு யாராலும் நிகழக் கூடாது என்று தானே வாங்கினான். ஆக  இராவண வதம் நிகழக் காரணம் இராமன் என்ற மனிதனும் சுக்ரீவன் என்ற வானரமும்.. அதற்காக இராமன் வனம் செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

தொடரும்

 


No comments: