துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 97
நேற்றைய தொடர்ச்சி....
ஆத்யாத்ம இராமாயணத்திலும் இந்தக் காட்சி சொல்லப்பட்டுள்ளது.
क्रोशन्तीं रामरामेति दृष्ट्वास्मान् पर्वतोपरि ।
आमुच्याभरणान्याशु स्वोत्तरीयेण भामिनी ॥ ३८॥
निरीक्ष्याधः परित्यज्य क्रोशन्ती तेन रक्षसा ।
नीताहं भूषणान्याशु गुहायामक्षिपं प्रभो ॥ ३९॥
दि निक्षिप्य तत्सर्वं रुरोद प्राकृतो यथा ॥ ४१॥
“"ராம!
ராம!" என்று கதறி அழுதுகொண்டே ஆகாய மார்க்கமாகச் சென்ற அந்த அழகிய சீதை, மலையின் உச்சியில்
அமர்ந்திருந்த எங்களைப் பார்த்தாள். உடனே, தான் அணிந்திருந்த ஆபரணங்களை விரைவாகக் கழற்றி, தனது
மேலாடையில் (உத்தரியத்தில்) முடிந்து கீழே போட்டாள். அரக்கன் ராவணனால் கடத்திச்
செல்லப்பட்ட அந்தச் சீதை, அழுதுகொண்டே எங்களைப் பார்த்தபடி அந்த மூட்டையைக் கீழே எறிந்தாள்.
பிரபுவே! அந்த ஆபரண மூட்டையை நான் எடுத்து வந்து, பாதுகாப்பாக
ஒரு குகைக்குள் வைத்தேன்” என்று காண்பித்தான்/
இராமன் அவற்றைப் பார்த்ததும் நெஞ்சில் அணைத்துக் கொண்டு சீதையை
நினைத்து சாதாரண மனிதன் போல புலம்பினான்.
வால்மீகியும் இராமனின் துயரத்தை தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
अभवत् बाष्प सम्रुद्धः नीहारेण इव चन्द्रमाः || ४-६-१६
सीता स्नेह प्रवृत्तेन स तु बाष्पेण दूषितः |
हा प्रिये इति रुदन् धैर्यम् उत्सृज्य न्यपतत् क्षितौ || ४-६-१७
இராமன் கண்ணீர்
மூட்டத்தால் மூடப்பட்ட நிலவைப் போலத் தோன்றினான். சீதையின் மீது உள்ள பாசத்தால், இராமனின் கண்கள் கண்ணீரால் கலங்கின. “அன்பே!” என்று அழுது, தன்னுடைய
தைரியத்தை இழந்து, தரையில் விழுந்தான்.
கண்ணீர் மூட்டம் கமலமெனத் தோன்றும்
மன்னன் மனம் கலங்கித் —
அன்பே எனக் கூவி அருள்விழுந்து வீழ்ந்தான்
துன்பம் தழுவினான்.
தொடரும்
No comments:
Post a Comment