துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 102
நேற்றைய தொடர்ச்சி
சுக்ரீவனுடன் இராமன் உரையாடல்
“ஒரு நல்ல நண்பன் என்ன செய்ய வேண்டுமோ அதை
நீ செய்கிறாய் என்று கேட்ட பின் இராமன் சுக்ரீவனிடம் அவன் காட்டில் வாசிப்பதன் காரணத்தைக் கேட்டான்
இராமன். . ஹனுமன் எல்லா விவரங்களையும் சுருக்கமாகச் சொல்லி விட்டார். இலக்ஷ்மணனும்
இராமன் சரிதத்தை விரிவாகக் கூறிவிட்டான். ஆனால் இதுவரை சுக்ரீவனுக்கு அந்த
வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இராமனுக்கு
சுக்ரீவனைப் பற்றிய விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை. சுக்ரீவனும்
அதற்காகக் காத்திருந்தான். இப்போது இராமனே அதைப் பற்றிக் கேட்டுவிட்டான்..
नाथ बालि अरु मैं द्वौ भाइ। प्रीति रही कछु बरनि न जाई॥
मयसुत मायावी तेहि नाऊँ। आवा सो प्रभु हमरें गाऊँ॥1॥
अर्ध राति पुर द्वार पुकारा। बाली रिपु बल सहै न पारा॥
வாலி சுக்ரீவன் பிணக்கின் காரணம்
அதற்கு சுக்ரீவன் “ஐயனே! வாலியும் நானும் சகோதரர்கள் ஆவோம். எங்கள்
இருவருக்குமிடையில் இருந்த அன்பை எவராலும் வர்ணிக்க முடியாது. இந்த நிலையில் மயன்
என்ற அரக்கனின் மைந்தன் ஒருவன், மாயாவி என்ற பெயருடையோன் ஒரு முறை எங்கள் ஊருக்குள் வந்தான். அவன் நடு இரவில்
வந்து நகரத்தின் கோட்டை வாயிலில் நின்று வாலிக்கு அறைகூவல் விடுத்தான். எதிரியின்
அறைகூவலைக் கேட்ட வாலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
(ஒருமுறை மேரு மலையில் தவம் செய்யும்
போது, பிரம்மாவின் கண்களிலிருந் விழ்ந்த
கண்ணீர்த் துளியிலிருந்து ஒரு குரங்கு தோன்றியது., அதன் பெயர் ரிக்ஷர்ஜா. ஒருமுறை ரிக்ஷராஜா தண்ணீரில் தன் நிழலைக்
கண்டு அதில் குதித்தான்..தண்ணீரில் விழுந்தவுடனேயே அழகிய பெண்ணாக உருவெடுத்தான். இந்திரனும் சூரியனும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும்
அவளது அழகில் மயங்கினர் . இந்திரன் தன் விந்துவை அவள் நெற்றியிலும், சூரியன் தன் விந்துவை அவள் கழுத்திலும் ஊற்றினான். இதனால், அந்தப் பெண் இந்திரனின் விந்துவிலிருந்து வாலி என்றும், சூரியனின் விந்துவிலிருந்து சுக்ரீவன் என்றும் இரண்டு குரங்குகளைப்
பெற்றெடுத்தாள். சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண் மீண்டும் தனது முந்தைய வடிவத்தை எடுத்துக் கொண்டாள்.
‘
தொடரும்
No comments:
Post a Comment