Saturday, May 2, 2026

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 94

 

நேற்றைய தொடர்ச்சி 

 

வாழ்க்கையில் செழிப்பை விரும்புவன் தனது பெயரை உச்சரிக்கக்கூடாது என்பது  எப்படிச் சாத்தியம்? பொதுவாக ஒவ்வொருவருக்கும் இரண்டு பெயர்கள் இருக்கும். அதிகாரபூர்வமான பெயர். செல்லமான பெயர். தனது செல்லப் பெயரை உச்சரிக்கலாம். அதிகாரபூர்வ பெயரை உச்சரிக்ககூடாது.  உபநயனத்தின் போது ஷர்மா நாம் என்று ஒரு பெயரைச் சொல்வர். இதைத்தான் உச்சரிக்கக்கூடாது என்று சொல்வர். அபிவாதயே சொல்லி வணங்கும்போது மட்டும் இந்தப் பெயரை உச்சரிக்கலாம். ஆனால் அதை உச்சரிப்பவர் அதைக் கேட்கக்கூடாது. இதனால் தான் அபிவாதயே சொல்லி வணங்கும்போது இரு காதுகளையும் பொத்திக் கொண்டு சொல்லவேண்டும் என்று சொல்லப் படுகிறது.)

 

வால்மீகி இராமாயணத்திலும்

 

क्रोशन्ती राम रामेति लक्ष्मणेति विस्वरम् |

स्फुरन्ती रावणस्य अन्के पन्नगेन्द्र वधूः यथा || --१०

 

சுக்ரீவன் சீதை இராமா! இலக்ஷ்மணா! என்று அலறிக் கொண்டே இராவணன் பிடியில் தத்தளிப்பதைப் பார்த்தேன் என்று சொல்கிறான்.

 

வால்மீகி இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் 58 வது சர்கத்தில் சம்பாதி

 

क्रोशन्ती राम राम इति लक्ष्मण इति भामिनी |

भूषणानि अपविध्यन्ती गात्राणि विधुन्वती || -५८-१६

 

மீண்டும் அதே நிகழ்வை அங்கதனிடம் தெரிவிக்கிறான். மேலும் இராமா! இராமா! என்று கத்திக் கொண்டே இருந்ததனால் அந்தப் பெண் சீதையாக இருக்கவேண்டும் என்றும் ताम् तु सीताम् अहम् मन्ये रामस्य परिकीर्तनात् | சொல்கிறான்.

 

ஹனுமான் நாடகம் என்ற நூலிலும் இந்த விவரங்கள் கிடைக்கின்றன

 

पापेनाकृष्यमाणा रजनिचरवरेणाम्बरेण ब्रजन्ती किष्किन्धादोौं मुमोच प्रचुरमणिगणैर्भूषणान्यर्जितानि। हा

राम प्राणनाथेत्ययह जहि रिपुं लक्षणेनालपन्ती यानीमानीति तानि क्षिपति रघुपुर: कापि रामाउ्जनेय:'

 

சீதை, இராவணனால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டபோது,தன் நகைகள், ஆபரணங்களை வழியிலே தரையில் விட்டாள்.- அவள் மனம் கலங்கி, “ஹா இராமா! என் உயிர்நாதா!என்று அழுதாள்.- லட்சுமணா! எதிரியை அழித்துவிடு!என்று கூவினாள்.- அவள் விட்ட ஆபரணங்களை ஹனுமன் சேகரித்து, பின்னர் ராமனிடம் கொண்டு வந்து காட்டினான்.)

 

 

இது சம்பந்தமாக பல நூல்களில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

தொடரும்..


No comments: