துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 111
நேற்றைய தொடர்ச்சி
சுக்ரீவன் சொல்வதின் தொடர்ச்சி..............
வாலியின் கோபம்
बाली ताहि मारि गृह आवा। देखि मोहि जियँ भेद बढ़ावा॥5॥
रिपु सम मोहि मारेसि अति भारी। हरि लीन्हसि सर्बसु अरु नारी॥
ताकें भय रघुबीर कृपाला सकल भुवन मैं फिरेउँ बिहाला॥6
“வாலி மாயாவியைக் கொன்று விட்டு திரும்பி வந்தான். நான் அரியணையில் அமர்ந்திருப்பதைக் கண்டதும்
அவனுக்கு வெகுவாகக் கோபம் வந்தது. நாட்டை அடைய வேண்டும் என்ற ஆசையால் குகையை விட்டு அவன் வெளியே வர இயலாத வகையில்
குகை வாயிலை அடைத்து விட்டு வந்து நான் அரசனாகி விட்டதாக அவன் கருதினான் அவன்
என்னை ஒரு விரோதியைப் போல் அடித்து நொறுக்கினான். என்னுடைய சொத்துக்களைப்
பிடுங்கிக் கொண்டதுடன் என் மனைவியையும்
அபகரித்துக் கொண்டான்; நான் அவனுக்கு அஞ்சி செய்வதறியாமல் உலகெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்.
வாலிக்கு சுக்ரீவனின் மீது கோபத்திற்கு முக்கிய காரணம் சுக்ரீவன்
குகையின் வாசலை மலைபோன்ற ஒரு பாறையை வைத்து அடைத்துவிட்டது தான். அதனால் வாலியால்
எளிதில் வெளிவரமுடியவில்லை.. வாலி தான் வெளியே வரக்கூடாது என்று சுக்ரீவன் தான்
இந்த நாட்டை ஆளவேண்டும் என்ற தீய எண்ணத்தில் தான் குகையிலிருந்து தான் வெளியே
வராதபடி குகையின் வாயிலை அடைத்துவிட்டான் என்று வாலி கருதியதாக வால்மீகி இராமாயணத்தில்
வால்மீகி சொல்கிறார், இதைத்தான் வாலி தனது அரச சபையில் சொல்கிறான்
तत्र अनेन अस्मि सम्रुद्धः राज्यम् मृगयत आत्मनः |
सुग्रीवेण नृशंसेन विस्मृत्य भ्रातृ सौहृदम् || ४-१०-२५
“உடன்பிறந்த அன்பை மறந்து, தனக்கு ராஜ்ஜியத்தை விரும்பி, கற்பனையில் ஆழ்ந்தக் கொடியவனான இந்த சுக்ரீவனால் நான் அங்கே
அடைக்கப்பட்டிருந்தேன்" என்றான் வாலி. இரண்டாவது அரசவாரீசான அங்கதன்
இருக்கும்போது சுக்ரீவன் எப்படி அரசை ஏற்றுக் கொண்டா,ன்? மூன்றாவது வாலியின் மனைவியான தாரையுடன்
சுகமாக வாழ்கிறான்” என்று நினைத்தான் வாலி.
'हारि लीनहेसि सर्बसु अरु नारी” என்னை எதிரியாக நினைத்து என்னிடமிருந்து அரசு மற்றும் எனது
மனைவியையும் அபஹரித்துக் கொண்டான் வாலி. அவர் மீது இருந்த பயத்தால் तद्धयाच्च महीं सर्वा क्रान्तवान्सवनार्णवाम्' உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து இந்த
ரிஷ்முக மலையில் வந்து தங்கிவிட்டேன்”
इहाँ साप बस आवत नाहीं।
तदपि सभीत रहउँ मन माहीं॥
“அவன் ஒரு சாபத்தின் காரணமாக இங்கு வருவதில்லை. இருப்பினும் மனதில் ஒரு
பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றான் சுக்ரீவன்.
தொடரும்
No comments:
Post a Comment