Tuesday, May 19, 2026

 


 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 112

 

நேற்றைய தொடர்ச்சி

 

வாலி அலட்சியமாகப் பேசியதக் கேட்ட துந்துபி கோபமாக :உனக்கு வீரியமிருந்தால் என்னுடன் யுத்தம் செய். வீண் விவாதம் வேண்டாம் நீ இப்போது அந்தப்புரத்தில் இருந்து வந்திருக்கிறாய். உற்சாக பானம் அருந்தி களைப்பாக இருக்கிறாய். களைப்பாக இருப்பவனுடன் சண்டையிடுவது பாவமாகும். காலை வரை உனக்காக காத்திருக்கிறேன். உன்னுடைய களைப்பை விட்டுப் புத்துணர்ச்சி அடைந்ததும் வா சண்டையிடுவோம் “என்றான் துந்துபி. 

  

 

வாலி துந்துபியின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரிந்தான். “நான் உற்சாக பானம் அருந்திருக்கிறேன் அது உண்மை தான். சண்டையிட நீ விரும்பினால் இப்போதே சண்டையிடலாம் வா!” என்று அசுரனைப் பிடித்துத் தூக்கித் தரையில் எறிந்தான். ரத்தம் கக்கி விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து சண்டைக்கு வர சில கணத்தில் அடித்தே கொன்றான் வாலி.

 

ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரனை சில கணங்களில் கொன்று விட்டான் வாலி. அவ்வளவு பெரிய பராக்கிரமசாலி. செத்து விழுந்த துந்துபி அசுரனை தூக்கி வீசினான் வாலி. அசுரன் ஒரு யோசனை தூரம் போய் விழுந்தான். அசுரன் விழுந்த இடத்திலிருந்து தெறித்த ரத்தத் துளிகள் காற்றில் பரவி அருகில் இருந்த மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது. இதனைக் கண்ட முனிவர் இதனைச் செய்தது யார் என்று அறிந்து கோபம் கொண்டார்.

 

 

 இந்த ஆசிரமம் இருக்கும் காட்டிற்குள் வாலி வந்தால் இறந்து விடுவான் என்று வாலியைச் சபித்து விட்டார் மதங்க முனிவர். அருகில் தான் மதங்க முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. முனிவர் சாபமிட்ட இடமே இது. முனிவரின் சாபத்தினால் வாலி பயந்து இங்கு வரமாட்டான். அதனால்  இந்த இடத்தில் நாங்கள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..”ஆனால் வாலி அவனது ஆட்களை இங்கு என்னைக் கொல்ல அனுப்புகிறான். அவர்களை  நான் கொன்றுவிடுகிறேன்.” என்றான் சுக்ரீவன்.

 

தொடரும்

 


No comments: