Wednesday, May 6, 2026

 


காலை வணக்கம்

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 98

 

நேற்றைய தொடர்ச்சி

 

சர்கம்   4

 

இராமனுக்கு சுக்ரீவன் அறுதல் 

 

कह सुग्रीव सुनहु रघुबीरा। तजहु सोच मन आनहु धीरा॥

सब प्रकार करिहउँ सेवकाई। जेहि बिधि मिलिहि जानकी आई॥4

 

அதைக் கண்ட சுக்ரீவன் “ஐயனே! கேளுங்கள். கவலையை யொழித்து மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஜானகியைத் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு அனைத்து வழிகளிலும் உதவி புரிவேன்” என்றான்.

 

 

अलम् वैक्लव्यम् आलम्ब्य धैर्यम् आत्मगतम् स्मर |

त्वत् विधानाम् सदृशम् ईदृशम् बुद्धि लाघवम् || --

महात्मा विनीतः किम् पुनर् धृतिमान् महान् || --

बाष्पम् आपतितम् धैर्यात् निग्रहीतुम् त्वम् अर्हसि |

मर्यादाम् सत्त्व युक्तानाम् धृतिम् उत्स्रष्टुम् अर्हसि || --

व्यसने वार्थकृच्छ्रे वा भये वा जीवितान्तगे ।

विमृशंश्च स्वया बुद्ध्या धृतिमान्नावसीदति ॥ ४.

ये शोकम् अनुवर्तन्ते तेषाम् विद्यते सुखम् |

तेजः क्षीयते तेषाम् त्वम् शोचितुम् अर्हसि || --१२

शोकेन अभिप्रपन्नस्य जीविते अपि संशयः |

शोकम् त्यज राजेन्द्र धैर्यम् आश्रय केवलम् || --१३ 

வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி சொன்னதுபோல  சுக்ரீவன் இராமனுக்கு ஆறுதல் கூறுகிறான். “தாங்கள் தைரியத்தைக் கைவிடாதீர்கள்.  தங்களைப் போன்ற உத்தமர்கள்,தைரியசாலிகள்  இப்படி துக்கப்படலாமா? ஒரு வானரமான நானும் மனைவியைப் பிரிந்தவன்தான். ஆனாலும் தைரியத்தைக் கைவிடாமல் மனத்தைக் கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.. அப்படி இருக்கும்போது தங்களைப் போன்ற வீரர்கள், படித்தவர்கள், நல்ல நடத்தை உள்ளவர்கள் இப்படிக் கண்ணீர் விடலாமா? ஆதலால் துயரத்தை விட்டு  மனதைத் திடப் படுத்திக் கொண்டு தைரியமாக இருங்கள். ரகுவம்சத்தில் எல்லோரும் வீரர்கள். அந்தக் குலத்தில் பிறந்த வீரனான நீங்கள் தைரியத்தைக் கைவிடலாமா? இது தங்களுக்கு அழகல்ல  तब भार्या महाबाहो भक्ष्यं विषकृतं यथा। त्यज शोकं-தங்கள் மனைவி ஜீரணிக்க முடியாத விஷம் கலந்த அன்னத்தைப் போன்றவள். அவளை யாரும் எளிதில் நெருங்க முடியாது. ஆகையால் கவலையை விடுங்கள் ” என்று சுக்ரீவன் கூறினான்.

 

தொடரும்

 


No comments: