Friday, May 15, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 109

 

நேற்றைய தொடர்ச்சி

 

குகைக்குள்ளிலிருந்து மாயாவியின் அலறல் சத்தம் பெரிதாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் வாலியிடமிருந்து எந்த விதச் சத்தமும் வரவில்லை..அதனால் எனது அண்ணன் இறந்துவிட்டதாகக் கருதி. மாயாவி குகையை விட்டு வெளி வந்துவிடக்கூடாது என்று நினைத்துக் குகையில் வாயிலை பெரிய பாறையைக் கொண்டு மூடிவிட்டு அண்ணணுக்கு வேண்டிய நீர்க்கடன்கள் செய்து முடித்தேன்.” என்றான் சுக்ரீவன்

 

 

இங்கு இரண்டு விதமான நிலைகள் உள்ளன. சுக்ரீவன் இராமனிடம் गूहमानस्यमे तत्त्वं यलततो मन्सत्रिभि: श्रुतम्' நான் உள்ளே இதுதான் நடந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து அதை மந்திரிகளிடம் தெரித்தேன் என்கிறான்.

 

गूहमानस्य मे तत्त्वं यत्नतो मन्त्रिभिः श्रुतम् ।
ततो ऽहं तैः समागम्य समेतैरभिषेचितः ॥ २० ॥

 

வாலியின் மரணத்தின் உண்மையை மறைக்க விரும்பினேன். ஆனால் அமைச்சர்கள் தங்கள் முயற்சியால் உண்மையை அறிந்து கொண்டனர்.. அமைச்சர்கள் தங்கள் முயற்சியால் தெரிந்து கொண்டனர் என்று சொல்லும்போது, சுக்ரீவன் மறைத்ததாகத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

உண்மையில்  வாலி மரணிக்க வில்லை.. அது சுக்ரீவனுக்கு தெரியாது. ஆனால் எந்தவிதமான மனநிலையில் சுக்ரீவன் அவ்வாறு சொன்னான் என்று தெரியவில்லை. இங்கு சிரோன்மணி என்ற உரையாசிரியர் சொல்லி இருக்கும் கருத்தாவது

 

गूहमानस्येति । तत्त्वं वालिवधं यत्नतो ऽनेकविधोपायैर्गूहमानस्य शत्र्वाक्रमणादिशङ्कया गोप्यमानस्य मे मन्त्रिभिरमात्यैः श्रुतं तेषां संनिधौ मया कथितमित्यर्थः ।

ततस्तस्माद्धेतोः समेतैः तैः मन्त्रिभिः अहमभिषेचितः ।

 

1. "गूहमानस्येति । तत्त्वं वालिवधं यत्नतो ऽनेकविधोपायैर्गूहमानस्य..."

 

பொருள்:

"மறைப்பவன்" என்று பொருள். வாலி இறந்த செய்தியை (மாயாவியுடனான போரில் வாலி இறந்துவிட்டதாகக் கருதி), சுக்ரீவன் பலவிதமான முயற்சிகளாலும் உபாயங்களாலும் மிகக் கவனமாக மறைத்து வைத்திருந்தான்.

 

விளக்கம்:



 வாலி ஒருவேளை இறக்காமல் இருந்து, சுக்ரீவன் நாட்டைப் பிடித்துக்கொண்டான் என்று தெரிந்தால் சினம் கொள்வான் என்ற பயத்தினாலும், அல்லது பகைவர்கள் இந்தச் செய்தியை அறிந்து நாட்டைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தினாலும் வாலி வதையைச் சுக்ரீவன் ரகசியமாக வைத்திருந்தான்.

 

2. "...शत्र्वाक्रमणादिशङ्कया गोप्यमानस्य मे मन्त्रिभिरमात्यैः श्रुतं तेषां संनिधौ मया कथितमित्यर्थः ।"

 

பொருள்:


 பகைவர்கள் நாட்டின் மீது படையெடுத்து வருவார்களோ என்ற அச்சத்தினால், அந்தச் செய்தியைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தான் சுக்ரீவன். இருப்பினும், அவனது அமைச்சர்கள் (மந்திரிகள்) அந்தச் செய்தியை எப்படியோ அறிந்து கொண்டனர்; அல்லது அந்த அமைச்சர்களிடம் மட்டும் சுக்ரீவன் தனிமையில் உண்மையை விளக்கிச் சொன்னான் என்று பொருள்.

 

3. "ततस्तस्माद्धेतोः समेतैः तैः मन्त्रिभिः अहमभिषेचितः ।"

 

பொருள்: 

அந்த காரணத்தினாலேயே (நாடு அரசன் இல்லாமல் அநாதையாக இருக்கக் கூடாது என்பதாலும், அமைச்சர்களின் வற்புறுத்தலாலும்), அந்த மந்திரிகள் அனைவரும் ஒன்று கூடி எனக்கு (சுக்ரீவனுக்கு) முடிசூட்டி வைத்தனர் (அபிஷேகம் செய்தனர்).

 

சுக்ரீவன் இராமனிடம் கூறுகிறான்: "நான் வாலி இறந்த செய்தியைத் தானாகத் தேடிப் போய் ஊர் முழுவதும் சொல்லவில்லை. பகைவர்களின் தாக்குதலுக்குப் பயந்து அதை மறைக்கவே முயன்றேன். ஆனால், என் அமைச்சர்கள் நாட்டு நலன் கருதி, என்னிடம் உண்மையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவர்கள் வற்புறுத்தியதால்தான் நான் அரியணையில் அமர்ந்தேன். நான் வாலியின் பதவியைத் திருடவில்லை" என்பதே இந்த வடமொழிப் பகுதியின் சாரம்.

 

சுக்ரீவனின் இந்த விளக்கத்தின் மூலம்தான், அவன் வாலிக்குத் துரோகம் செய்யவில்லை, சூழ்நிலையால் மன்னனாக வேண்டியிருந்தது என்பதை இராமன் உணர்கிறான்.

 

தொடரும்


No comments: