துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 95
நேற்றைய தொடர்ச்சி
இங்கு சுவையான ஒரு விஷயத்தை உரையாசிரியர்கள்
சொல்கின்றனர். துளசிதாசர், சீதை மூன்று முறை இராமா, இராமா, இராம என்று கத்தியாதகச்
சொல்கின்றனர். இதன் தாத்பர்யம் என்ன? இராவணன் மிகச் சாமர்த்தியமாக யாருக்கும்
தெரியாமல் மிக உயரத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தான். கிஷ்கிந்தாவின் மேலே
செல்லும்போது சீதை கீழே குனிந்து பார்த்ததில் மூன்று குரங்குகள் தங்களுக்குள்
பேசிக்கொண்டிருந்தன. அவர்கள் கவனத்தைக் கவர வேண்டும். வெறும் ஆடையைக் கீழே
வீசினால் அது காற்றில் பறந்து சென்று விடும். அதற்குள் தனது கொலுசு, குண்டலம்
இவைகளை வைத்துக் கட்டி மூன்று முறை இராமா
என்று அலறியபடி கீழே வீசினாள். இராமன் வந்துவிடுவானோ என்ற பயத்தில் இராவணன்
வேகமாகச் சென்று கொண்டிருந்தபடியால் பின்னால் திரும்பி சீதை என்ன செய்து
கொண்டிருந்தாள் எனப் பார்க்கவில்லை.
சீதையின் முதல் இராமா என்ற கூக்குரல்
குரங்குகளின் கவனத்தைக் கவருவதற்காக. இரண்டாவது அலறல் இந்த ஆடையையும் நகைகளையும்
இராமனிடம் சேர்த்துவிடுங்கள் என்று சொல்வதற்காக. மூன்றாவது அலறல் நான் இராமனை
விரும்புகிறேன். இவன் என்னைக் கடத்திச் செல்கிறான் என்று தெரிவிப்பதற்காக. சுக்ரீவன்
இராமனிடம் சீதை ஆடையை எறிந்தாள் என்று மட்டும் சொல்கிறான். காரணம் அவன் சீதை
எறிந்ததை பார்க்கவில்லை, காரணம் அது இன்னொருவருக்குச் சேர வேண்டியது. “धन पराव बिष ते बिष भारी சுக்ரீவனைப் பொறுத்தவரை அடுத்தவரின் செல்வம்
விஷத்தை விட கொடிய விஷம், அதனால் சீதை வீசியதை அவன் திறந்து பார்க்காமல் அப்படியே
குகைக்குள் வைத்துவிட்டான்.. இந்த விலை மதிக்க முடியாத வஸ்து சுக்ரீவனின் கையில்
கிடைத்ததுமே “சீதையைத் தேடும் பணி தொடங்கி விட்டது मम दिसि देखि दीन्ह पट डारी। என்று உரையாசிரியர்கள் சொல்கின்றனர்.
துளசிதாசர் இங்கு “मागा राम तुरत तेहि दीन्हा” என்ற பதப் பிரயோகம் செய்துள்ளார். அதாவது तुरत என்ற வார்த்தை இங்கு முக்கியமானது..
இராமனுக்கு சீதை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் வேகத்தைக்
குறிக்கிறது. சுக்ரீவனைப் பார்த்து இன்னும் ஏன் தாமதம். உடனே அதைக் கொண்டுவா என்று
சொல்கிறார்.. இராமனுக்கு சுக்ரீவன் சொன்ன பொருள் சீதையுடைதுதானா என்று
பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல். வால்மீகி இராமாயணத்திலும் சுக்ரீவனிடம்
तम् अब्रवीत् ततः रामः सुग्रीवम् प्रिय वादिनम् |
आनयस्व सखे शीघ्रम् किम् अर्थम् प्रविलम्बसे || ४-६-१३
இதே கருத்தைச் சொல்லுகிறார்..
தொடரும்..
No comments:
Post a Comment