துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 105
நேற்றைய தொடர்ச்சி
மாயாவிக்கு வாலியைக் கண்டதும் பயம். குகைக்குள் சென்றுவிட்டால் வாலி
திரும்பி விடுவான் என நினைத்தான்.மேலும் வாலியின் பின்னால் நானும் ஓடிவருவதை
மாயாவி கவனித்து விட்டான். ஒருவேளை குகைக்குள் மாயாவின் நண்பர்கள் இருக்கலாம்.
அதனால் வாலியை குகைக்குள் அழைத்து சென்றுவிட்டால் அங்கு நண்பர்களின் துணையுடன்
வாலியைக் கொன்றுவிடலாம் என்று நினைத்து மாயாவி குகைக்குள் சென்றிருக்கலாம். வாலிக்கு அவனது பலத்தின் மீது அபார நம்பிக்கை.
அதனால் அவன் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை அப்பொழுது வாலி என்னையழைத்துக் கூறினான்.”
परिखेसु मोहि एक पखवारा। नहिं आवौं तब जानेसु मारा॥3॥
मास दिवस तहँ रहेउँ खरारी। निसरी रुधिर धार तहँ भारी॥
“நான் திரும்பி வருகிறேனா என்று இங்கு தங்கி பதினைந்து நாட்கள் வரை
எனக்காகக் காத்திரு. அந்தப் பதினைந்து நாட்களுக்குள் நான் வரவில்லை என்றால் நான்
கொல்லப்பட்டதாக நீ எண்ணிக் கொள்” என்றான்.
இங்கு வாலி परिखेसु मोहि एक पखवारा என்று சொல்கிறான். வாலி சுக்ரீவனிடம் பதினைந்து நாட்கள் மட்டும் குகையின் வாசலில்
காத்திருக்கச் சொன்னதன். காரணம் ‘அதற்குள்
நான் வராவிட்டால் தேவையில்லாமல் காத்திருக்க வேண்டாம்’ என்று சொல்வதற்காகவே.
வாலி ஒரு வீரன். ஒரு வீரனுக்குத் தெரியும்
ஒரு வேலையை எத்தனை நாட்களில் முடிக்க முடியும் என்று. வாலி மாயாவியை பதினைந்து
நாட்களுக்குள் கொன்றுவிடலாம் என்று நினைத்திருப்பான். அதனால் சுக்ரீவனிடம்
அப்படிச் சொன்னான்.. “ஐயனே! நான் ஒரு மாத காலம் வரை அங்கு தங்கி இருந்தேன். ஒருநாள்
அந்தக் குகையின் உள்ளிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடிவந்தது. வாலி சொன்ன நாட்கள் பதினைந்து ஆனால் சுக்ரீவன் இருந்ததோ முப்பது
நாட்கள். இதிலிருந்து சுக்ரீவனுக்கு வாலியின் மீது உள்ள பாசம் தெரியவருகிறது..
தொடரும்.......
No comments:
Post a Comment