துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 106
நேற்றைய தொடர்ச்சி
வால்மீகியின் இராமாயணத்தில் சுக்ரீவன் வாலியுடன் குகைக்குள் செல்ல
விரும்பினான். ஆனால் வாலி உள்ளே வரக்கூடாது வெளியில் இருக்கவேண்டும் என்று சத்யம்
செய்யச் சொல்லிவிட்டான்..
अहत्वा न अस्ति मे शक्तिः प्रति गन्तुम् इतः पुरीम् |
बिल द्वारि प्रतीक्ष त्वम् यावत् एनम् निहन्मि अहम् || ४-१०-१८
ஆத்யாத்ம இராமாயணத்திலும் இதற்கு இணையான ஒரு சுலோகம் உள்ளது
'इत्युक्त्वाविश्य स गुहां मासमेकं न
निर्ययौ॥ मासादूर्ध्व गुहाद्वारान्निर्गतं रुधिरं बहु।
============================
बालि हतेसि मोहि मारिहि आई। सिला देइ तहँ चलेउँ पराई॥4
मंत्रिन्ह पुर देखा बिनु साईं। दीन्हेउ मोहि राज बरिआईं॥
“மாயாவி வாலியைக் கொன்று விட்டான். இனிவந்து என்னையும் கொன்று விடுவான் என அஞ்சி அக்குகையின் வாயிலை
ஒரு பெரிய பாறையால் மூடிவிட்டு வந்தேன்” “இங்கு அரசன் இல்லாமல் நாடு தவிப்பதை
மக்கள் பார்த்தனர். அவர்கள் என்னை நிர்பந்தப் படுத்தி எனக்கு முடி சூட்டி அரசனாக
ஆக்கினர்.” என்று சொன்னான் சுக்ரீவன்
(எதை வைத்து வாலி கொல்லப்பட்டான்
என்று சுக்ரீவன் கருதினான்? இதற்கு வால்மீகி விளக்கம் அளிக்கிறார்.
नर्दताम् असुराणाम् च ध्वनिः मे श्रोत्रम् आगतः |
न रस्तस्य च संग्रामे क्रोशतो अपि स्वनो गुरोः ||
अहम् तु अवगतः बुद्ध्या चिह्नैः तैः भ्रातरम्
हतम् |
पिधाय च बिल द्वारम् शिलया गिरि मात्रया || ४-९-१९
(குகைக்குள்ளிலிருந்து மாயாவியின் அலறல்
சத்தம் பெரிதாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் வாலியிடமிருந்து எந்த விதச்
சத்தமும் வரவில்லை..அதனால் எனது அண்ணன் இறந்துவிட்டதாகக் கருதி. மாயாவி குகையை
விட்டு வெளி வந்துவிடக்கூடாது என்று நினைத்துக் குகையில் வாயிலை பெரிய பாறையைக்
கொண்டு மூடிவிட்டு அண்ணணுக்கு வேண்டிய நீர்க்கடன்கள் செய்து முடித்தேன்.” என்றான்
சுக்ரீவன்)
தொடரும்
No comments:
Post a Comment