துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 103
நேற்றைய தொடர்ச்சி
பிரம்மாவின் ஆணைப்படி அவரது மகன் ரிக்ஷரஜா
கிஷ்கிந்தையை ஆட்சி .செய்ய ஆரம்பித்தார். பிறகு அவர் பிரம்ம லோகம் திரும்ப அவரது
மகன் வாலி கிஷ்கிந்தையை ஆட்சி செய்தான். வாலி மிகவும் சக்தி வாய்ந்தவன். பெரிய
மலைகளின் சிகரங்களைப் பிடித்து, அவற்றை வேரோடு
பிடுங்கி, தூக்கி எறிந்து, விளையாடுவான்... பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி எறிவான். ஒருமுறை இராவணன்
வஞ்சகத்தால் அவனை வெல்ல வந்தான். அப்போது வாலி
கடலில் சந்தியா தர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். அதே நிலையில் இராவணனைப் பிடித்து
அவன் கைகளுக்கிடையே வைத்து அழுத்தினான்.
(ஆறு மாதங்கள் தனது அக்குளில் வைத்து அழுத்திக்கொண்டே இருந்தான்.). அவனை தனது
வாலில் கட்டி இழுத்துக் கொண்டு நான்கு சமுத்திரங்களுக்கும் சென்று சந்தியா வந்தனம்
செய்தான்.
இந்த நிகழ்வு பற்றி திருஞான சம்பந்தர்
தனது வடகுரங்காடுதுரை பதிகத்தில் பாடியுள்ளார்
“நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோடு இலைஇல வங்கமே இஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரையடைகுரங் காடுதுறையே!..
தனது பூஜைக்கு இடையூறாகச்
சண்டையிடுவதற்கு வந்த நீலமாமணி நிறத்தரக்கனான இராவணனை பெரிய முயற்சி ஏதும்
செய்யாமளே தனது வாலினால் கட்டினான் வாலி என்று பாடியுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாலி இராவணனின் மோசமான
நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு அவனுடன் ஒரு நட்பு உடன்படிக்கை செய்தான். அதாவது
யாராவது கிஷ்கிந்தை வழியாகச் சென்று இராவணனைத் தாக்கினால் வாலி இராணனைப்
பாதுகாப்பான்.
பின்னால் அங்கதன் இராவணனைச்
சந்திக்கும் பொழுது இதைச் சொல்லி உனக்கு இது நினைவில் இல்லையா? என்று கேட்டதாகவும்
சொல்லப்படுகிறது)
தொடரும்
No comments:
Post a Comment