Wednesday, September 30, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

வாலி வத சர்ச்சை

 

பதிவு எண் 222

 

நேற்றைய தொடர்ச்சி.

 

 தாரை, ஒரு நொடியே சிந்தித்த பிறகு தனது தலைவனிடம் {வாலியிடம்}, “ஓ! குரங்குகளின் ஏகாதிபதியே, கேளும்! வில்லாளிகளில் முதன்மையானவனும், பெரும் வலிமை படைத்தவனும், தன் மனைவியை இழந்தவனும், தசரதன் மைந்தனுமான ராமன், தாக்குதலுக்காவும், தற்காப்புக்காகவும் சுக்ரீவருடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறான். சுக்ரீவரின் நோக்கம் வெல்வதற்காகச் சுமித்திரையின் வீழ்த்தப்பட முடியாத மகனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனுமான லட்சுமணனும் அவன் {ராமன்} அருகில் நிற்கிறான். மயிந்தன் திவிவிதன் , பவனனின் மகனான ஹனுமான் {ஹனுமான்} மற்றும் கரடி மன்னனான ஜாம்பவான்  } ஆகியோர் சுக்ரீவரின் அருகில் ஆலோசகர்களாக {அமைச்சர்களாக} இருக்கிறார்கள். இந்தச் சிறப்புமிக்கவர்கள் அனைவரும், பெரும் பலமும், புத்திக்கூர்மையும் கொண்டவர்களாவர். இவர்கள் அனைவரும் ராமனின் வலிமையையும் சக்தியையும் நம்பி, உம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றனர்!” என்றாள். 

 

तस्यास्तदाक्षिप्य वचो हितमुक्तं कपीश्वरः।

पर्यशङ्कत तामीर्षुः सुग्रीवगतमानसाम् ॥०३-२६४-२५॥

 

தன் நன்மைக்காகச் சொல்லப்பட்ட அவளது {தாரையின்} வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரங்குகளின் மன்னன் {வாலி}, அவை அனைத்தையும் மொத்தமாக அலட்சியப்படுத்தினான். பிறகு பொறாமையால் நிறைந்த அவன், சுக்ரீவன் மீது அவள் {தாரை} இதயத்தை நிலைக்க வைத்திருக்கிறாள் எனச் சந்தேகப்பட்டான்! 

 

பிறகு தாரையிடம் கடும் வார்த்தைகள் பேசிவிட்டு, குகையை விட்டு வெளியேறி, மால்யவாத மலைகளின் அருகில் நின்று கொண்டிருந்த சுக்ரீவனின் முன்பு வந்து, “முன்பு என்னால் அடிக்கடி வீழ்த்தப்பட்ட நீ, உனது உயிரை விரும்பியதால், என்னுடன் நீ கொண்ட உறவு முறைக்காக, {உயிருடன்} தப்பிச் செல்ல என்னால் அனுமதிக்கப்பட்டாய். இவ்வளவு விரைவாக உன்னை மரணத்தை விரும்ப வைத்தது எது?” என்று கேட்டான்.

 

வாலியால் இப்படிச் கேட்கப்பட்ட எதிரிகளைக் கொல்பவனான சுக்ரீவன், என்ன நடந்தது என்பதை ராமனுக்குச் சொல்வது போல, தன் அண்ணனிடம் {வாலியிடம்} "ஓ! மன்னா, உன்னால் மனைவியையும், நாட்டையும் இழந்த நான், உயிர் வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அதற்காகவே {மனைவிக்காகவும், நாட்டுக்காகவுமே} நான் வந்திருக்கிறேன் என்பதை அறி!” என்ற சிந்தனைக்குரிய வார்த்தைகளைப் பேசினான். பிறகு, இது போலவும், வேறு வார்த்தைகளாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட வாலியும், சுக்ரீவனும் மோதலுக்கு விரைந்தனர். பிறகு அவர்கள் ஆச்சா மரங்கள், பனை மரங்கள் மற்றும் கற்களைக் கொண்டு போரிட்டுக் கொண்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பூமியில் அடித்துக் கீழே வீழ்த்தினர். காற்றில் உயர குதித்த அவர்கள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தங்கள் நகங்களையும் பற்களையும் கொண்டு ஒருவரையொருவர் சிதைத்துக் கிழித்தனர். அவர்கள் இருவரும் ரத்ததால் மூடப்பட்டிருந்தனர் {ரத்தத்தில் நனைந்தனர்}.

 

அவர்கள் அப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது (தோற்றத்தில்) அவர்களிடையே ஒரு வேற்றுமையும் காணப்படவில்லை. பிறகு ஹனுமான், சுக்ரீவனின் கழுத்தில் மலர்களால் ஆன மாலையை அணிவித்தான். பிறகு அந்த வீரன் {சுக்ரீவன்}, வரிசையான மேகங்களுடன் கூடிய மால்யா {மால்யாவாதம்} எனும் பெரும் சிகரத்தைப் போல அழகாக, கழுத்திலிருந்த அந்த {மலர்} மாலையால் ஒளிர்ந்தான். அந்தக் குறிப்பால் சுக்ரீவனை அடையாளம் கண்ட இராமன், விற்களில் முதன்மையான தனது பெரும் வில்லை எடுத்து, தனது இலக்காக வாலியைக் குறிவைத்தான்.

 

தொடரும்


No comments: