Sunday, September 13, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 206

 

இராமன் தாரையிடம் சொல்கிறான் இங்கு உனக்கு முன் கிடக்கும் உடல் இதற்கு முன் உனது கணவருடையது . இப்போது அந்த ஐந்து பூதங்கள் அவர் உடலிலிருந்து தங்கள் பங்கை எடுத்துக் கொண்டு விட்டன. ஆனால் வாலியின் ஆத்மாவிற்கு அழிவில்லை. உடலை விட்டு ஆத்மா சென்ற பிறகு உடலை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?

 

துளசிதாசர் இங்கு छिति जल पावक गगन समीरा நிலம், நீர், அக்னி, ஆகாயம் வாய் என்று  உயிர் உருவாகுதை கிரமப்படி சொல்கிறார்,. ஆனால் சுந்தர காண்டத்தில்  இந்த முறையை மாற்றி “गगन समीर अनल जल धरनी ‘  ஆகயம், வாயு, நெருப்பு, நீர்  நிலம் என்று சொல்கிறார் ஏன் இந்த முரண் பாடு என்று கேட்கலாம்.. இதை முரண்பாடு என்று சொல்ல முடியாது. காரணம் முதலில் இராமன் தாரையிடம் சொல்வதாக வருகிறது. – தாரை, ஒரு ஞானி, தத்துவவாதி. அவர் உடல் உருவாக்கம் பற்றிப் பேசுகிறார். எனவே, நிலம் (அதிக ஸ்தூலமானது) முதல் தொடங்கி, ஆகாயம் (சூக்ஷ்மமானது) வரை செல்கிறார் — இது பஞ்சபூத உருவாக்க வரிசை..

 

சுந்தர காண்டத்தில் இராமன் இலங்கைக்குச் செல்ல சமுத்திர ராஜனை வழிவிடுமாறு கேட்கிறான். பணிவுடன் கேட்டும், கோபத்துடன் அச்சுறுத்தியும், கடல் வழி தர மறுத்ததால், கடைசியில் அருளும் ஆணவமும் கலந்த ஒரு தருணம் நிகழ்கிறது. இராமன்  அஸ்திரத்தைக் கையில் எடுத்ததும் சமுத்திர ராஜன் (பூத தெய்வம்) இராமனிடம் தன்னை பஞ்ச பூதங்களில் பிரதிநிதியாக காட்டிக் கொள்கிறான்.

 

सभय सिंधु गहि पद प्रभु केरे । छमहु नाथ सब अवगुन मेरे ॥ ।

गगन समीर अनल जल धरनी । इन्ह कइ नाथ सहज जड़ करनी ॥ १ ॥

 

சமுத்திர ராஜன் பிரபுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஓ நாதா! இந்த ஐந்து பூதங்களும் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி), உங்கள் ஆணையால் உருவானவை.. அவற்றின் இயல்பு ஜடம் — அறிவில்லாதது. எனவே, என் தவறுகள் என் இயல்பின் விளைவாகவே நிகழ்ந்தவை. தயவுசெய்து மன்னிக்கவும்!” அதாவது ஸமுத்திரம், தன்னை ஒரு பஞ்சபூதத்தின் பிரதிநிதியாகக் காட்டி, தன்னுடைய இயல்பை நியாயமாக்கி, இராமனின் கருணையை நாடுகிறான். இது தத்துவ ராமாயணத்தின் ஒரு முக்கிய தருணம்:.இயற்கையின் எல்லா கூறுகளும் தெய்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன, ஆனால் அவை தங்கள் இயல்புக்கு உட்பட்டவை — இங்கு, பரபரப்பான, பரவலான, சூட்சுமமான பூதங்கள் (ஆகாயம், காற்று) முதல், ஸ்தூலமான பூதங்கள் (நெருப்பு, நீர், நிலம்) வரை வரிசை அமைக்கிறார் — இது தத்துவ பாசுர வரிசை.

 

தொடரும்


No comments: