அஸ்ஸாம் மேகாலயா பயணம்
ஆர். சேஷாத்ரிநாதன்
பதிவு எண் மூன்று
பாலாஜி கோவில் தரிசனம் முடித்துவிட்டு அந்த வளாகத்தில் உள்ள உணவகத்தில் காலை
உணவு அருந்திவிட்டு கிளம்பினோம்.
அடுந்து நாம் சென்றது பிரசித்தி
பெற்ற காமாக்யா கோவில்
அசாம் மாநிலத்தில்
கவுகாத்தியிலுள்ள நிலாச்சல் என்ற குன்றின் மீது அமைந்துள்ளது இந்த காமாக்யா
கோவில். இது மிகவும் பழமையான கோவிலாகும். 51 சக்தி பீடங்களில் முதன்மையாக கருதப்படுகிறது. இந்த கோவில் மக்களின்
விருப்பங்களை நிறைவேற்றும் கோவிலாகவும் மற்றும் யோனியை வழிபடும் கோவிலாகவும்
உள்ளது.
காமாக்யா தேவாலயம்
வாய்மொழி வரலாறு மற்றும் புராணக்கதைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது; சில சமயங்களில் இந்த
மூலங்கள் வெவ்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. தேவி பாகவதம், தேவி புராணம், காளிகா புராணம், யோகினி தந்திரம், ஹேவஜ்ர தந்திரம் போன்ற
பல்வேறு பண்டைய இலக்கியங்களில் காமாக்யா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன .
காமாக்யா கோயிலின் தோற்றம், ஆரியர்களுக்கு முந்தையது அல்லது பழங்குடியினப் பண்புகளையும் சடங்குகளையும்
கொண்டது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், காமதேவனால் மூலக் கோயில் கட்டப்பட்டதாகவும், அவர் இங்கு தனது அழகை
மீண்டும் பெற்றதாகவும் சமய இலக்கியங்கள் கூறுகின்றன. விஸ்வகர்மாவின் உதவியுடன்
கட்டப்பட்ட இந்தக் கோயில், ஒரு பிரம்மாண்டமான அமைப்பாக நம்பப்பட்டது, இது இந்தியாவில்
பரவலாகப் பின்பற்றப்படும் சக்திவாய்ந்த தாந்திரீக சக்தி வழிபாட்டின் மையப்
புள்ளியாகும்.
சிவபெருமான் சக்தியின்
உடலை வைத்து தாண்டவம் ஆடிய போது சக்தியின் 51 துண்டுகளில் சக்தி தேவியின் யோனி
பகுதி விழுந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு அம்பு பாச்சி மேளா முக்கிய திருவிழாவாக
உள்ளது. பெண்மையின் ஆற்றல் மற்றும் படைப்பு சுழற்சியை குறிக்கும் ஸ்தலமாகும்.
கருவறையில் சிலை இல்லை. ஆனால் அதற்கு பதிலாக பாறையில் யோனியின் உருவம் அமைய
பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன்
மாதம் அம்மனின் மாதவிடாய் சுழற்சியை கொண்டாடும் வகையில் மூன்று நாட்கள் கோவில் நடை
மூடப்பட்டிருக்கும். நான்காம் நாள் தான் கோவில் திறக்கப்படும். இந்தக் கோவில்
எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1500ஆம் ஆண்டு கோச் வம்சத்தால் புதுப்பிக்கப்பட்டது. காமாக்யா தேவி, காமரூபதேவி எனவும்
அழைக்கப்படுகிறாள். இங்கு தசா மகா வித்யா கோவில் எனப்படும் 10 கோவில்கள் உள்ளவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவி கோவில்கள்
இங்கு உள்ள காமாக்யா கோவில்களில் காணப்படுகிறது. ஏனைய ஏழு கோவில்களும் தனித்தனியாக
அமைந்துள்ளன.
தொடர்கிறேன்
No comments:
Post a Comment