துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 214
நேற்றைய தொடர்ச்சி.............
துளசிதாசர் இராமனை अति कृपाल என்று சொல்கிறார்.
காரணம் இராமன் சீதையைத் தேடிக் கொடுக்க சுக்ரீவனின் உதவி கண்டிப்பாகத் தேவை
என்னும் சுயநலத்திற்காக அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்க வில்லை. அவனது பரிதாப
நிலையைக் கண்டுதான் கொடுத்த வாக்கின்படி அரசனாக்கினான். சுயநலத்திக்காக என்றால்
அவன் வாலியிடமே நட்பு கொண்டிருப்பான்.காரணம் வாலி சொன்னான் “நீங்கள் என்னுடன்
நட்பு கொண்டிருந்தால் நான் இராவணன் கழுத்தில் சுருக்கிட்டு கடல் கடந்து உங்கள்
முன் கொண்டு நிறுத்தியிருப்பதோடல்லாமல், சீதையையும் தேடிக் கொண்டுவந்திருப்பேன்”
என்று.
थिलिम् अहम् एक आह्ना तव च आनीतवान् भवेः || १-१७-४९
राक्षसम् च दुरात्मानाम् तव भार्य अपहारिणम् |
कण्ठे बद्ध्वा प्रदद्याम् ते अनिहतम् रावणम् रणे || ३-१७-५०
न्यस्ताम् सागर तोये वा पाताले वा अपि मैथिलीम् |
आनयेयम् तव आदेशात् श्वेताम् अश्वतरीम् इव || ४-१७-५१
ஆனால் சுக்ரீவனோ வாலிக்குப் பயந்து பதினான்கு உலகங்களையும் சுற்றி
யாரும் அடைக்கலம் தராமல், இறுதியில் வாலி
வர முடியாத ரிஷ்ய முக மலைக்கு வந்து சேருகிறான். ஆனாலும் வாலி விடமால் சுக்ரீவனைக்
கொல்லத் தொடர்ந்து வானரங்களை அனுப்ப, சுக்ரீவன் அவர்களைக் கொன்று விடுவான். ஆனால்
சுக்ரீவனின் உடலில் நிறைய காயங்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. அவனது இந்த
நிலையைக் கண்ட இராமன் அவனுக்கு வாக்களித்தபடி அவனைக் கிஷ்கிந்தைக்கு
அரசனாக்கினான்.
ஆனால் துளசி தாசர் சொல்கிறார் . எவன் ஒருவன் இராமனை மறந்து விடுவானோ
அவர்கள் ஆபத்து என்னும் வலையில் சிக்கிக் கொள்கின்றனர். துளசிதாசர் இதைச் சொல்ல
வேண்டிய காரணம் என்ன?
சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்ட பிறகு காமக் களியாட்டங்களில் ஈடுபட்டு
இராமனையும் அவனுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியையும் மறந்துவிடுகிறான். ஹனுமன்
பின்னால் சுக்ரீவனுக்கு இதை நினைவூட்டுகிறார்.
कामं खलु शरै: शक्त: सुरासुरमहोरगान्। वशे
दाशरथि: कर्त त्वत्प्रतिज्ञामवेक्षते॥'
“இராமனைப் பற்றி நீ என்ன நினைத்தாய். அவர் பாணத்தால் தேவர்கள்,
அசுரர்கள், அரக்கர்கள், பெரிய பாம்புகள் அனைத்தையும் தன் வசப்படுத்திவிடுவார். நீ
எம்மாத்திரம்? உனது வாக்குறுதியை எதிர்பபார்க்கிறார்” என்றான். இதிலிருந்து இராமன்
தனது சுயநலத்திற்காக சுக்ரீவனை கிஷ்கிந்தையின் அரசனாக ஆக்கவில்லை என்று தெரிகிறது.
தொடரும்
No comments:
Post a Comment