அஸ்ஸாம் மேகாலயா பயணம்
ஆர். சேஷாத்ரிநாதன்
பதிவு எண் ஐந்து
மேகாலயா (Meghalaya) வடகிழக்கு இந்தியாவின்
அமைந்துள்ள ஏழு மாநிலங்களில் ஒன்று. இதன் தலைநகரம் சில்லாங் நகரம் ஆகும்.
இம்மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழியும் பேசப்படுகிறது.
அமைவிடம்
இந்தியாவின் அஸ்ஸாம்
மாநிலத்துக்கும்,
வங்காள தேசத்துக்கும்
இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கி.மீ. நீளமும், 100 கி.மீ. அகலமும் உடையதாக
உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கி.மீ. ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா
ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும்.
மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம்
மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் அம்மாநிலத்தின் இரு மாவட்டங்களைத்
தனியாகப் பிரித்து;
ஐக்கிய காசி மலைகள், ஜெயின்டியா மலைகள், காரோ மலைகள் ஆகியபகுதிகளைக் கொண்டு
21 ஜனவரி 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
மேகாலயாவின் காலநிலை
மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன்
கொண்டது. ஆண்டிற்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை
காணப்படுவதால், இந்தியாவின் அதிக
ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான
சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில்
உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள
மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப்
பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும்.
மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள், சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே
ஷில்லாங் சிகரம்,
1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள்
அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள
அழகான கிராமமான ஷில்லாங்கை தலைநகரமாகக் கொண்டுள்ளது மேகாலயா. நகரத்தை சுற்றியுள்ள
மலைகள் ஆங்கிலேயர்களுக்கு ஸ்காட்டிஷ் உணர்வை கொடுத்ததால் இது 'கிழக்கின்
ஸ்காட்லாந்து' என்று
அழைக்கப்படுகிறது.
உண்மையில் ஷில்லாங்கை
பூலோக சுவர்க்கம் என்று அழைக்கலாம்.
No comments:
Post a Comment