துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 213
நேற்றைய தொடர்ச்சி..........
लछिमन तुरत बोलाए पुरजन बिप्र समाज।
राजु दीन्ह सुग्रीव कहँ अंगद कहँ जुबराज॥11॥
இலக்ஷ்மணன் உடனே நகரவாசிகளையும், அந்தணர்களையும் அழைத்து அவர்கள்முன் சுக்ரீவனுக்கு அரசப் பட்டமும்
அங்கதனுக்கு இளவரசப் பட்டமும் சூட்டினான்.
पुरजन நகரவாசிகளை ஏன்
அழைக்க வேண்டும்? சுக்ரீவனை முறையாக
அறிமுகப்படுத்த. ஏற்கனவே அவர்கள் வாலி இறந்ததிலிருந்து பயத்தின் பிடியில் இருக்கின்றனர்.
அவர்களின் பயத்தைப் போக்கி இனி சுக்ரீவன் தான் உங்கள் அரசன். அவன் கட்டளைப்படி
தான் நீங்கள் நடக்கவேண்டும் என்று தெரிவிப்பதற்காக. மேலும் அவர்கள் மனப்பாரத்தைக் குறைப்பதற்காக
அங்கதனை இளவரசனாக முடிசூட்டி விட்டோம்
என்று தெரிவிப்பதற்காகவும் தான். முடிசூடுதல்
என்பது வேத கோஷத்துடன் நடக்கவேண்டும் என்பதற்காக அந்தணர்கள் அழைக்கப்பட்டனர்.
उमा राम सम हत जग माहीं। गुरु पितु मातु बंधु प्रभु नाहीं॥
सुर नर मुनि सब कै यह रीती। स्वारथ लागि करहिं सब प्रीति॥1
இந்த இடத்தில் சிவ பெருமான் பார்வதியிடம் கூறுகிறார் “பார்வதி! உலகில்
பகவன் இராமனைப் போல நன்மை செய்யக்கூடியவர் எவருமிலர். ஆசிரியர், தந்தை, தாய்,
உறவினர் எஜமானர் என்று எவரானாலும் சரி , அவரைப் போல் நன்மைகள்
செய்ய முடியாது.
जे सुर, सिद्ध, मुनीस, जोगविद वेद-पुरान बखाने
।*
*पूजा लेत, देत पलटे सुख हानि-लाभ
अनुमाने ।।२।।*
மேலும் தேவர்கள், மனிதர்கள்,
முனிவர்கள் ஆகியோர் காட்டும் அன்பு கூட அவர்களுடைய சுயநலத்தின் அடிப்படையில் தோன்றுகிறது”
बालि त्रास ब्याकुल दिन राती। तन बहु ब्रन चिंताँ जर छाती॥
सोइ सुग्रीव कीन्ह कपि राऊ। अति कृपाल रघुबीर सुभाऊ॥2॥
* जानतहूँ अस प्रभु परिहरहीं। काहे न बिपति जाल नर परहीं॥
“எந்த சுக்ரீவன் வாலியைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தானோ,
எவனுடைய உடலில் ஏராளமான காயங்கள் எற்பட்டிருந்தனவோ, மேலும் எவனுடைய மனம்
கவலையினால் வெந்து எரிந்து கொண்டிருந்ததுவோ, அப்படிப்பட்ட சுக்ரீவனை வானரர்களுக்கு
அரசனாக்கி வைத்தார். ஸ்ரீ இராம பிரானின் சுபாவம் கருணை நிறைந்ததாகும்” “இந்த
விவரம் அறிந்திருந்தும் எவர் பகவான்
இராமனை மறந்து விடுகிறார்களோ, அவர்கள்
ஆபத்து என்னும் வலையின்பின் ஏன் சிக்கிக் கொள்ளமாட்டார்கள்?”
தொடரும்
No comments:
Post a Comment