துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
பதிவு எண் 217
நேற்றைய
தொடர்ச்சி..............
ஆனந்த
இராமாயணம்
வாலியைக் கொல்லும் முறை மறைந்து நின்று கொல்லுதல்
ஆனந்த
இராமாயணமும் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதில் இராமன்
வாலியைக் கொன்ற விவரம் எவ்வாறு
சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாம். இதிலிருந்து வால்மீகியின் மூல
இராமாயணத்திலிருந்து எவ்விதத்தில் வேறு படுகிறது என்பதையும் காணலாம்.
இராமனிடம் நட்புக் கொண்ட சுக்ரீவன் இராமனின் வீரத்தைச் சோதிக்க
விரும்புகிறான்.பின் சக்ரிவன் தமது பராக்கிரமத்தைக் காண்பதின் நிமித்தம்
இராமன் அங்கிருக்க துந்துபியின் சிரசைத்
தமது பெரு விரலால் எற்ற அது பத்துக் காத வழி தூரஞ் சென்று விழுந்தது.
இதுவன்றி
மகானாகிய இராமர் அங்கொரு இடத்தில் சக்ராகாரமாக நின்ற ஏழு பனைமரங்களைக் கண்டு, அம்மரங்கள் பூமிக்குளிருக்கும் ஒரு பாம்பின்
உடலிலிருந்து முளைத்திருப்பதாகவும் தெரிந்து பக்கத்திலிருக்கும். இலட்சுமணருடைய
பாதத்தைத் தமது பாதப் பெருவிரலால் சிறிது அழுத்தி, ஆதிசேஷ அம்சமான அப்பாம்பை ஒழுங்குபடுத்தி
மரங்கள் யாவையும் வரிசைக் கிரமத்திலிருக்கச் செய்து, ஒரு பாணத்தால் அவைகளைத் துளைத்து வீழ்த்தினார்.
அப்பாம்பில் மரங்கள் முளைக்க வேண்டிய காரணம் யாதெணில், முன்னொரு சமயம் தற்செயலாய் ஏழு பனம்
பழங்களை ஒருவன் கொண்டுவரக்கண்டு, வாலி அவைகளைத் தன் குகையில் வைக்கும்படி. சொல்லிப் பின் அவைகளைஜ்
தான் சென்று பார்க்கையில், அந்தப் பழங்களேமும் ஒரு சர்ப்பமாகக் காணப்பட்டன. அதைப் பார்த்தவுடன் வாலி உன் உடலின் மேல்
ஏழு மரங்கள் முளைக்கக் கடவதெனச் சாபமிட்டான். உடனே சர்ப்பமானது அம்மரங்களை
வெட்டுகிறவனே உன்னைக் கொல்லுகிறவனாவான் அதற் கையமில்லை எனப் பதிலுக்கு. சாபம் கொடுத்தது.
இராம
சாமர்த்தியங்களைச் சுக்ரீவன் கண்டு மகிழ்ச்சி யடைந்து “ஏ இராமா! நான் இன்னொரு விசேஷங் கூறுறேன்.
தேவர்களுக் கதிபதியாகிய இந்திரன் முன் ஒரு மாலையை வாலிக்குக் கொடுத்திருக்கிறான்.
அந்தமாலையை ௮ணிந்திருப்பவனை யுத்த முகத்தில் யார் பார்க்கிறானோ அவனுக்கு அவனுடைய
புஜபலம் முழுமையும் போய்விடும், ௮ம்மாலை வாலிக்குக் கிடைத்ததெப்படியெனில், காஷ்யப பிரஜாபதி முன்னொரு காலத்தில்
உக்ரமான தவஞ் செய்து பரமசிவனிடத்திருந்து அம்மாலையை யடைந்து தமது புத்திரனாயெ இந்திரனுக்குக்
கொடுத்திருந்தார். இந்திரன் தன்னுடைய புத்திரன் வாலிக்கு அன்புடன் கொடுக்க, அம்மாலையை இப்பொழுது வாலி தன்கழுத்தில்
௮ணிந்திருப்பதால் , அவனை நீர் பார்த்தவுடன் உமத பலம் ஒழிந்துவிடும். ஆகையால் அதிலிருந்து வெற்றி
பெற உபாயம் ஒன்று யோசித்துக் கொள்ளும்”? என்று சொன்னான். இராமர் உடனே அருகிலிருந்த சர்ப்பத்தைப் பார்த்து உன் உடலில் முளைத்திருந்த மரங்களேழையும்
வெட்டி உனக்குச் சாபவிமோசனம் தந்தேனல்லவா ? ஆகையால் நீ என் சொற்படி. இப்பொழுதே கிஷ்கிந்தாபுரி
பட்டணஞ் சென்று இரவில் வாலி நித்திரை செய்யும் சமயம் கோக்க, அவன் கழுத்தில் அணிந்திருக்கும் மாலையைக்
கொண்டுவா'' என கட்டளையிட்டார்.
தொடரும்
No comments:
Post a Comment