துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
பதிவு எண் 219
நேற்றைய
தொடர்ச்சி............
வாலி வீழ்ந்த செய்தியைக் கேட்ட தாரை ஓடிவந்து ரணகளத்தில் இராமபாணத்தினால் அடிபட்டு விழுந்து கிடக்கும் வாலியைப் பார்த்து மிக்க வருந்தினாள். பிறகு வாலி ராமனாதனாகிய ஸ்ரீ ராமரைப்பார்த்து “நீர் வீரராக இருந்தும் என்னை ஒருமரத்தில் மறைந்து மார்பில் பாணம் எய்ததினால் உம்முடைய கீர்த்திக்குப் பெருங்குறை நேரிட்டது. எனக்கு வெகு நன்மை கிடைத்தது, இவ்விதம் என்னை அடித்த தள்ளும்படி.யாக யான் தங்களுக்குச் செய்த அபசாரம் யாது?!”” என்று வினவினான். இராமர் “ஏ வாலி! உன் சகோதரனாகிய சுக்ரிவனுடைய மனைவியை நீ உன்மனையில் வைத்துக் கொண்டதுமன்றி, அவனையும் துரத்தித் துரத்திஅடித்துக் கொன்றுவிட நீ விரும்பிய குற்றமே, உன்மேற் கோபங் கொண்டு கொன்றதற்குக் காரணமாகும்.
“ உன் துர்நடத்தை
நிமித்தம் நான் உன்னைக் கொன்றேனாயினும்
நீ அதற்குப் பிரதியாக துவாபரயுகத்தின் கடைசியில் ஒரு வேடனாகப்பிறந்து
பிரபாஸமென்ற க்ஷேத்திரத்தில் என்னுடைய காலில் ஒரு பாணம் எய்து இப்பழியை தீர்த்துக்கொண்டு, அப்பிறப்பிலேயே முத்தியடைவாய்”' என்று கூறினார். வாலி *ஏ இராகவா! எனக்கு அப்படியாகப்போவது உண்மையே.
ஆனால் சீதையை இராவணன் எடுத்துப்போன விஷயத்தை எனக்கு முன்னாலேயே தெரிவித்திருப்பீர்களேயானால்
ஒரு நிமிஷத்தில் இராவணனைக் கொண்டே அந்தச்
சீதையை உம்மிடம் திரும்பக் கொண்டுவந்துவிடும்படி. செய்திருப்பேன்; என்றான் வாலி.
முன்பு
சொன்னது போல ஆனந்த இராமாயணமும் வால்மீகியால் எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் மூல காவியத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
வால்மீகி
இராமாயணம் — மரபில்
ஆதிகாவியம்; இராமகதையின்
அடிப்படை, பழமையான
சம்ஸ்கிருத மகாகாவியம்.
ஆனந்த
இராமாயணம் இராமகதையை விரிவுபடுத்திய பின்னைய சம்ஸ்கிருத நூல். இதில் வால்மீகி
இராமாயணத்தில் இல்லாத பல கதைகள், ஸ்தோத்திரங்கள், கவசங்கள், விரதங்கள், இராம நாம மகிமை போன்றவை இடம்பெறுகின்றன.
ஆய்வாளர்களிடம் இது வால்மீகியின் காலத்துக்குப் பிந்தைய படைப்பு என்ற கருத்தே
வலுவாக உள்ளது. ஒரு பதிப்பின் அறிமுகமே இதனை சுமார் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
பின்னைய படைப்பாகக் கருதுகிறது. வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர்
சுப்ரமணிய பாரதியார்.
தொடரும்
No comments:
Post a Comment