துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 212
வாலியின் இறுதிச் சடங்கு
தாரை அங்கிருந்து அகன்ற பிறகு இராமன் சுக்ரீவனிடம் முறைப்படி
வாலிக்குச் செய்யவேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்யுமாறு உத்தரவிட்டான். உத்திரக்
கிரியைகள் நடந்தன. இராமன்
சுக்ரீவனுக்கு அந்திமக் கிரியையகள் முறைப்படி செய் बिधिवत என்று உத்திரவிட்டதால், சாஸ்த்திரப்படி
அங்கதன் தனது தந்தைக்கு ஈமக் கிரியைகள் செய்தான் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்..
ततः सुग्रीवमाहेदं रामो वानरपुङ्गवम् ॥ ३९॥
भ्रातुर्ज्येष्ठस्य पुत्रेण यदुक्तं
साम्परायिकम् ।
कुरु सर्वं यथान्यायं संस्कारादि ममाज्ञया
गत्वा चकार तत्सर्वं यथाशास्त्रं प्रयत्नतः ।
ஆனால் ஆத்யாத்ம இராமாயனத்தில் இராமனின்
உத்திரவின்படி வாலியின் மகனான அங்கதனைக் கொண்டு வாலிக்கு இறுதிக் கிரியைகள்
செய்வித்தான் சுக்ரீவன் என்று சொல்லப்பட்டுள்ளது.
சுக்ரீவனுக்கு முடிசூட்டல்
பின்பு இராமன் தம்பி இலக்ஷ்மனனைப் பார்த்து “நீ சென்று சுக்ரீவனுக்கு
முடிசூட்டி அவனை அரசனக்கிவிட்டு வா” என்று கூறினார். இராமனின் உத்திரவிற்கேற்ப,
அனைவரும் இராமனின் திருவடிகளை வணங்கிப் புறப்பட்டனர்.
இங்கு துளசிதாசர் समुझाई என்ற பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது அங்கதனை இளவரசனாக முடிசூட்ட
வேண்டும் என்று அறிவுறுத்தினார். காரணம் அங்கதனை இளவரசனாக முடிசூட்டாவிட்டால்
மக்கள் நம்மை நிந்தனை செய்வார்கள். வாலி அங்கதனை இராமனிடம் ஒப்படைத்தான். ஆனால்
இராமன் அவனைக் கைவிட்டுவிட்டான் என்று நிந்திப்பர். இன்னொரு காரணம் அங்கதனை
இளவரசனாக முடிசூட்டினால் தான் சுக்ரீவன் அவனை நல்லவிதமாக நடத்துவான். ஆனால் இந்த
விஷயத்தை அவர் நேரடியாகச் சுக்ரீவனிடம் சொல்ல்லவில்லை. ஆனால் வால்மீகி இராமாயணத்து
இராமன் சுக்ரீவனிடமே சொல்கிறான் “உனக்கு உலகவிவகாரம் தெரியும். அங்கதன் உனது
சகோதரனின் புதல்வன். மிக நல்லவன். புத்திசாலி. பலசாலி அவனுக்கு இளவரசனாக
முடிசூட்டு” என்கிறார்.
लछिमन तुरत बोलाए पुरजन बिप्र समाज।
राजु दीन्ह सुग्रीव कहँ अंगद कहँ जुबराज॥11॥
இலக்ஷ்மணன் உடனே நகரவாசிகளையும், அந்தணர்களையும் அழைத்து அவர்கள்முன் சுக்ரீவனுக்கு அரசப் பட்டமும்
அங்கதனுக்கு இளவரசப் பட்டமும் சூட்டினான்.
தொடரும்
No comments:
Post a Comment