துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
வாலி வத சர்ச்சை
பதிவு எண் 221
நேற்றைய
தொடர்ச்சி..........
அடுத்து நாம்
பார்க்க இருக்கும் இராமாயணம் இராமோபாக்யானம்.
வாலியைக்
கொல்லும் முறை : நேருக்கு நேர்
இது வேத
வியாசர் எழுதிய மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள இராமாயணத்தின் சுருக்கம். மகாபாரதத்தில்
வன பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. மார்கண்டேய முனிவர் பாண்டவர்களுக்கு
இராமாயணத்தின் கதையைச் சொல்லுகிறார்.
“ராமன், சுக்ரீவனுடன் நட்புக் கொண்ட பிறகு, பூமியில்
உள்ள குரங்குகளுக்கு மன்னனாகச் சுக்ரீவனை நிறுவினான். மேலும் ராமன் போரில்
வாலியைக் கொல்வதெனப் பற்றுறுதியை ஏற்றுக்கொண்டான்.
प्रतिजज्ञे च
काकुत्स्थः समरे वालिनो वधम्।
सुग्रीवश्चापि
वैदेह्याः पुनरानयनं नृप ॥०३-२६४-१४॥
பிறகு ஒரு புரிதலை அடைந்து, ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கைவைத்த
அவர்கள் அனைவரும் (வாலியுடன்) போரிட விரும்பி கிஷ்கிந்தைக்குச் சென்றார்கள்.
கிஷ்கிந்தையை அடைந்ததும், சுக்ரீவன், மலைவீழாறு போல ஆழ்ந்த கர்ஜனையை உரக்க எழுப்பினான். இந்த அறைகூவலைத் தாங்கிக் கொள்ளாத வாலி, வெளியே வந்தான். (ஆனால் அவனது மனைவி) தாரை
அவனது வழியில் நின்று, “பெரும்பலத்தோடு கூடி சுக்ரீவர் கர்ஜிக்கும் முறை, அவர் ஏதோ துணையை அடைந்திருக்கிறார் என்பதைக்
காட்டுகிறது என நான் கருதுகிறேன். எனவே நீர் வெளியே செல்வது தகாது!” என்றாள். அவளால் {தாரையால்} இப்படிச் சொல்லப்பட்ட குரங்குகள் மன்னனும், தங்க மாலை அணிந்திருந்தவனும், நாநயமிக்கவனுமான வாலி, நிலவு போன்ற அழகு முகம் கொண்ட தாரையிடம், “அனைத்து உயிரினங்களின் குரலையும் நீ
புரிந்து கொள்கிறாய். {எனவே}, பெயரளவுக்கே எனது தம்பியான இவன் {சுக்ரீவன்}, யாருடைய உதவியைப் பெற்றிருக்கிறான் என்பதைச்
சிந்தித்துச் சொல்!” என்றான்
தாரை, ஒரு நொடியே சிந்தித்த பிறகு தனது தலைவனிடம் {வாலியிடம்}, “ஓ! குரங்குகளின் ஏகாதிபதியே, கேளும்! வில்லாளிகளில் முதன்மையானவனும், பெரும் வலிமை படைத்தவனும், தன் மனைவியை இழந்தவனும், தசரதன் மைந்தனுமான ராமன், தாக்குதலுக்காவும், தற்காப்புக்காகவும் சுக்ரீவருடன் ஒரு
கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறான். சுக்ரீவரின் நோக்கம் வெல்வதற்காகச் சுமித்திரையின்
வீழ்த்தப்பட முடியாத மகனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனுமான லட்சுமணனும் அவன் {ராமன்} அருகில் நிற்கிறான். மயிந்தன் திவிவிதன் , பவனனின் மகனான ஹனுமான் {ஹனுமான்} மற்றும் கரடி மன்னனான ஜாம்பவான் } ஆகியோர் சுக்ரீவரின் அருகில் ஆலோசகர்களாக {அமைச்சர்களாக} இருக்கிறார்கள். இந்தச் சிறப்புமிக்கவர்கள்
அனைவரும், பெரும் பலமும், புத்திக்கூர்மையும் கொண்டவர்களாவர். இவர்கள்
அனைவரும் ராமனின் வலிமையையும் சக்தியையும் நம்பி, உம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றனர்!” என்றாள்
தொடரும்
No comments:
Post a Comment